Wednesday, March 29th, 2017

கவர்ச்சியான அழகு நிறைந்ததா பெண்ணின் கூந்தல்?

Published on June 9, 2012-9:30 am   ·   No Comments

தலைமுடிக்கும் பாலியல் உணர்விற்கும் தொடர்பிருப்பதாக பிரபல பாலியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பண்டைய காலத்தில் இருந்தே தலைமுடியானது மனிதர்களின் பாலுணர்வை தூண்டும் பொருளாக இருந்துள்ளதாக நிபுணர்கள் கண்டறிதுள்ளனர்.
கூந்தல் என்பது மனிதர்களின் அழகோடு தொடர்புடையது. இது முக்கிய அம்சமாக கருதப்படுவதால்தான் இல்லறத்தை வெறுத்த பிரம்மச்சாரினிகளும், கிருஸ்தவமத சகோதரிகளும் தங்களின் அழகை மறைக்க கூந்தலை சுத்தமாக வழித்துவிட்டோ அல்லது முக்காடிட்டு மறைத்துக்கொண்டோ வாழ்க்கின்றனர்.

கூந்தலானது கவர்ச்சியான அழகை தரக்கூடியது. தலையின் மீது கருகருவென நீண்ட கூந்தல் அமைந்திருந்தால் அந்த பெண்ணின் அழகு அதிகரிக்கிறது. இதனால் பெரும்பாலோனோரின் கண்கள் அந்த பெண்ணைத்தான் பார்க்கின்றனர். அழகான கூந்தலுக்கும் தாம்பத்ய உறவுக்கும் தொடர்புடையதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அழகான கூந்தல் என்பது பெண்மையின் அம்சம். அது மென்மையை உணர்த்துகிறது. பெண்ணின் தைரியத்தை காட்டுகிறது. அனைவருக்கும் கவர்ச்சியான அழகையும் தருகிறது. அதனால்தான் சிறப்புவாய்ந்த பாலியல் நிபுணரான எல்லீஸ், தனது நூலில் கூந்தலானது பாலுணர்வை தூண்டும் ஒரு அம்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

கூந்தலானது கண்களை கவர்கிறது. அதனை தொட தூண்டுகிறது. எத்தனையோ டிசைன்களில் நகைகளை அணிந்தாலும் கூந்தல் இல்லாத பெண்களுக்கு அழகு சற்று குறைச்சலாகத்தான் இருக்கும். கூந்தலானது கவர்ச்சியின் அம்சமாக கருதப்படுவதால்தான் பண்டைய காலங்களில் கணவனை இழந்த பெண்களின் கூந்தலை வழித்து தலையில் முக்காடிட்டு வந்துள்ளனர். புத்தமதம், ஜைனமதத்தை தழுவியவர்கள் துறவியாக முடிவு செய்த பெண்கள் தங்கள் கூந்தலை முற்றிலும் வழித்துக்கொண்டனர். இதன் மூலம் தங்களின் அழகை பிறருக்கு காட்சிப்பொருளாக்காமல், பிறரை இம்சிக்காமல் இறைவன் சேவையை கருத்தில் கொண்டு வாழ்கின்றனர் துறவிகள்.

கார்மேக கூந்தலைக் கொண்ட பெண்கள் சாதாரணமாக உடை அணிந்திருந்தாலும் அந்த கூந்தல் அழகே அவளை பேரழகியாக காட்டும் அதனால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு அனைவரும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் கூந்தலானது காதல் உணர்வையும், பாலுணர்வையும் அதிகரிக்கும் பொருளாக இருந்துள்ளது. பெண்ணின் கூந்தல் அழகு ஆணின் மூளையில் சமிக்ச்சைகளை தூண்டுகிறது. அதேபோல் ஆணின் தலையில் கூந்தல் இருப்பதுதான் அவர்களின் அழகையும் கவர்ச்சியினையும் அதிகரிக்கிறது. அதனால்தான் பெரும்பாலான ஆண்கள் கொஞ்சம் முடி உதிரத்தொடங்கினாலே அழகு போய்விட்டதே என்று பதறத்தொடங்குகின்றனர். தாம்பத்ய உறவின் போது கூந்தலை கோதுவதன் மூலம் உணர்வுகளை தூண்ட முடியும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நறுமணத்தைலங்களை தடவி கூந்தலை வளர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூந்தலை அழகுபடுத்துவது மனிதர்களின் சுதந்திர உணர்வை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. அதேபோல் பண்டைய திருமணங்களில் ஆணும், பெண்ணும் கூந்தலை முடி போட்டு தங்களின் திருமண பந்தத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.

அதேபோல் தம்பதியரிடையே ஆரோக்கியமான தாம்பத்ய உறவு இருக்கும் பட்சத்தில் கூந்தல் வளர்ச்சியானது அதிகரிக்கிறது. இந்த செக்ஸ் ஹார்மோன்களின் சுரப்பு சரியான அளவு இருக்கும் பட்சத்தில் அதிக அளவு கூந்தல் வளர்ச்சியடைகிறது. அதேபோல் அதிக அளவில் கவலை ஏற்பட்டாலோ மன அழுத்தம் இருந்தாலோ கூந்தல் உதிரத்தொடங்குகிறது. நமது மனஆரோக்கியத்தோடும், உடல் ஆரோக்கியத்தோடும் தொடர்புடையதாக இருக்கிறது கூந்தல்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...