Sunday, May 28th, 2017

ஐரோப்பாவில் இடியப்பம் சொதி சம்பல் – ஆபத்தை விலைகொடுத்து வாங்கும் தமிழர்கள்

Published on August 31, 2012-8:39 am   ·   No Comments

 தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எல்லாம் கடைகளில் பிட்டு, இடியப்பம் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே பின்னர் போட்டியாக மாறி 50 இடியப்பம் சொதி சம்பல், என்றும் பின்னர் 100 இடியப்பம் சொதி சம்பல் இவ்வளவு பணம் என, விலை குறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இடியப்பம் ஒரு நல்ல உணவு சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள். ஆனால் இடியப்பத்தை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் சிலர் சாதாரண இடியப்ப தயாரிப்பைப் பின்பற்றுவது இல்லை என்ற அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான கடைக்காரர்கள் இடியப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று தெரியுமா ? அவர்கள் இடியப்பத்தை தயாரிக்கும் முறையை நீங்கள் கேட்டால், இனிமேல் இடியப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் !

இடியப்ப மாவை குழைக்கும்போது, பிழிவதற்கு இலகுவாக இருக்கட்டும் என்று அதில் அதிகளவு எண்ணெயை கலக்கிறார்கள். அது சரி நல்ல எண்ணெய்தானே அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதான் இல்லை. சமையல் செய்து, அல்லது பொரித்த பின்னர் மிஞ்சும் எண்ணெயை அல்லவா இடியப்பமாவில் கலக்கிறார்கள்.

இதில் 2 விடையங்கள் உள்ளது. ஒன்று இலகுவாகப் பிழியலாம் மற்றது இடியப்பத்துக்கு ஒரு பிரவுன் நிறக் கலர் வருகிறது. இவ்வாறு நிறைய எண்ணெயைக் கலந்து செய்யும் இடியப்பம் இலகுவில் காய்ந்துவிடாது. பொலிஷ் பண்ணியதுபோல காயாமல் கனநேரம் இருக்கும். ஆனால் எண்ணெய் ஊற்றிச் செய்வதால், இவ்வகையான இடியப்பத்தில் அதிக கொழும்பு காணப்படுகிறது.  அதுமட்டுமல்லாது பொரித்த எண்ணையைப் பாவிப்பதால் அக்கொழுப்பில் கொலஸ்ரோலும் அதிகளவு இருக்கும்.

கொலஸ்ரோல் உள்ள அந்த எண்ணையை இடியப்ப மாவில் கலந்து அவிப்பதால் அது மீண்டும் சூடாகி மேலதிக கலஸ்ரோலை உருவாக்கும். இவ்வாறு தயாரிக்கப்படும் இடியப்பத்தை தான் கடைகளில் வாங்கிச் சாப்பிடுகிறோம் நாங்கள். சிறிதளவும் கொழுப்பு இல்லை, உடம்பிற்கு நல்ல உணவு என்று நாம் நம்பி உண்ணும் உணவு எமக்கே யாமனாக அமைந்துவிடுகிறது.

பல கடைகளில் அது நடக்கிறது. ஓடருக்கு இடியப்பம் அவித்து கொடுக்கும் தனிநபர்களும் எண்ணை ஊற்றி அவிக்கும் விளையாட்டை செய்கின்றனர்.

பிரித்தானியாவில் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்கப்படும் உணவுப் பொட்டலங்களில், கொழுப்பு, காபோஹட்ரேட், சக்கரை அளவு 100 கிராமுக்கு எவ்வளவு இருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் இடியப்பம் போன்ற உணவுப் பொருட்களில் இதுபோன்ற விடையங்கள் எப்போதும் குறிப்பிடப்படுவது இல்லையே ! இவை முறையாக பகுப்பாய்வு செய்யப்படவேண்டும்.

இடியப்பத்தில் எவ்வளவு கொழுப்புச் சத்து, சக்கரை, மற்றும் காபோஹட்ரேட் அளவு எவ்வளவு உள்ளது என்பது போன்ற விபரங்கள் முறையே வெளியிடப்படவேண்டும். இதனூடாகவே அதனை உண்ணும் நபர் ஒருவருக்கு இது குறித்த அறிவு கிட்டும்.

இதனை அந்த அந்த நாடுகளில் உள்ள கவுன்சிலே பரிசோதனை செய்யவேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழர்கள் பிரயோகிக்கவேண்டும். இதனூடாகவே நாம், சத்துள்ள உணவைச் சாப்பிடுகிறோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். தமிழர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வழிசமைக்கும்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...