Tuesday, February 28th, 2017

வவுனியா இந்து அன்பகத்தின் நீர்ப்பிரச்சினையைத் தீர்த்துவைத்த ரஜிந்தாவின் பெற்றோர்

Published on October 12, 2012-11:09 am   ·   No Comments

வவுனியா இந்து அன்பகத்திற்கு பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர் பொன்னம்பலம் கணேசலிங்கம் சதீஸ் தம்பதியர் தமது புதல்வி அமரர் செல்வி ரஜிந்தாவின் நியாபகார்த்தமாக அவரது நினைவுநாளில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து நீர்த்தாங்கியையும் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இதன் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள இந்து அன்பகத்தில் தாய் தந்தையரை இழந்த மற்றும் வறுமையால் வாடும் பெற்றோர்களின் பிள்ளைகள் தங்கியுள்ளனர்.

வவுனியாவில் நிலவும் வரட்சி இந்து அன்பகத்தையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையத்தின் கிணறு வற்றிவிட்டதால் அன்பகம் பெரும் நீர்ப்பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. இந்த விடயம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அவரது வேண்டுகோளுக்கு இணங்க பிரான்சிலிருந்து இயங்கும் ரி.ஆர்.ரி. தமிழொலி வானொலி நேயர் பொன்னம்பலம் கணேசலிங்கம் சதீஸ் தம்பதியர் தமது புதல்வி அமரர் செல்வி ரஜிந்தாவின் நியாபகார்த்தமாக அவரது நினைவுநாளில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து நீர்த்தாங்கியையும் கட்டிக்கொடுத்துள்ளனர்.

இந்து அன்பகத்தின் தலைவி சாமிஅம்மா என்று அழைக்கப்படுகின்ற சிவச்செல்வி கு.ஜெயராணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நீர்த்தாங்கியின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார். கௌரவ விருந்தினர்களாக பண்டாரிக்குளம் முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ ஆதி சௌந்தர்ராஜா குருக்கள், கிளிநொச்சி பிராந்திய மின்சாரசபை பொறியியலாளர் பிரபாகரன், யாழ் இணுவிலைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பொறியியலாளரான பொ.பாலசுப்பிரமணியம், ஓய்வு பெற்ற வங்கியாளர் வை.ஸ்ரீஸ்கந்தவரோதயன், வவுனியா தமிழ்ச்சங்கத் தலைவர் தமிழருவி த.சிவகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்களுடன் மருத்துவக்கலாநிதி கந்தையா இராமச்சந்திரன், வவுனியா பிரதேசசபை உறுப்பினர் கதிர்காமு பரமேஸ்வரன், சமூகசேவையாளர்கள் திரு.திருமதி. மா.கதிர்காமராஜா மற்றும் சண்மாஸ்டர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அன்பகச் சிறார்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,
எமது புலம்பெயர் உறவுகளும் தாய்நாட்டில் வாழும் உறவுகளும் தங்களது ஆடம்பரச் செலவினங்களைக் குறைத்து வடக்கு-கிழக்கில் பல்வேறு காப்பகங்களில் தமது எதிர்காலக்கனவுகளைச் சுமந்து வாழும் பல்லாயிரக்கணக்கான சிறார்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முன்வரவேண்டும். எம்மீது திணிக்கப்பட்ட யுத்தம் பல்லாயிரக்கணக்கான சிறார்களை ஆதரவற்றவர்களாக ஆக்கியுள்ளது. அவர்கள் பல்வேறு காப்பகங்களில் தங்கியுள்ளனர். வவுனியா மாவட்டத்தில் மட்டும் ஒன்பது காப்பகங்களில் 1200 சிறார்கள் வசிக்கின்றனர்.
எமது உறவுகள் அவர்களது எதிர்காலக் கனவுகளை நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும். தங்களது பிள்ளைகளின் பூப்புனித நீராட்டுவிழா, பிறந்தநாள்விழா, திருமணம் போன்ற வைபவங்களுக்கான ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு காப்பகங்களில் வாழுகின்ற சிறார்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

இதற்கு முன்னுதாரணமாக யாழ் இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டு பிரான்சில் வசித்துவரும் கணேசலிங்கம் தம்பதியர் திகழுகின்றனர். தமது புதல்வியின் நினைவுநாளில் வவுனியா இந்து அன்பகத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பிள்ளைகளின் நீர்ப்பிரச்சினையைத் தீர்த்து அந்தக்குழந்தைகளின் மகிழ்வில் தமது புதல்வி ரஜிந்தாவின் சிரிப்பைப் பார்க்கின்றனர்.
ரி.ஆர்.ரி வானொலி தமது நேயர்களின் மூலம் பல்வேறு வழிகளிலும் யுத்தத்தால் பாதிப்புற்ற எமது மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது. அவர்களது பணி சிறக்க வேண்டும். இதனை ஏனையோர்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mangala-2

SRI LANKA FM SAMARAWEERA’S STATEMENT AT HRC 34 – FULL TEXT [February 28, 2017]

Statement by Foreign Minister Mangala Samaraweera at the ...
Mangala and UN sec.

இலங்கைக்கு வருமாறு ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு மங்கள சமரவீர அழைப்பு [February 28, 2017]

ஐ.நா.செயலாளர் நாயகமாக பதவி ஏற்றுள்ள அன்ரொனியோ குட்டெஸை இலங்கைக்கு விஜயம் ...
media in geneva

ஜெனிவா ஐ.நா.மனித உரிமை பேரவையில் குவிந்துள்ள தமிழர்கள். [February 27, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிய நிலையில் ...
S.Jaishankar-listens-to-TNA-leader-leaders-R.Sampanthan

THE UNITY OF THE TAMIL LEADERSHIP NEEDED TO FULFIL POLITICAL ASPIRATIONS OF TAMILS – S. JAISHANKAR. [February 27, 2017]

 By Manekshaw. Indian Foreign Secretary S. Jaishankar has ...
sampanthan and france team

சில நிபந்தனைகளுடனேயே சிறிலங்காவுக்கு காலநீடிப்பு வழங்க வேண்டும்- பிரான்ஸ் குழுவிடம் சம்பந்தன் கோரிக்கை. [February 27, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு ...
zeid

சில அரச தலைமைகள் மனித உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்றனர்- ஐ.நா.மனித மனித உரிமை ஆணையாளர் குற்றச்சாட்டு video [February 27, 2017]

உலகில் உள்ள சில அரசியல் தலைமைகள் மனித உரிமைகளுக்கு எதிராக ...
UNO GENEVA

ஐ.நா.மனித உரிமை பேரவையின் உயர்மட்ட அமர்வில் பலஸ்தீன அதிபருக்கு முதலில் பேச சந்தர்ப்பம். [February 27, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் இன்று காலை ஜெனிவா ...
mullaitheenu_firshing

கொடிய இந்தியர்களால் அல்லல் படும் முல்லைத்தீவு மீனவர்கள். [February 27, 2017]

பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கொடிய இந்தியர்கள் ...
kaludurai

களுத்துறையில் சிறைச்சாலை பஸ் மீது துப்பாக்கிச் சூடு. 7 பேர் பலி. [February 27, 2017]

களுத்துறை வடக்கு சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் ...
Photo caption for files: IMG_7462.JPG, IMG_7465.JPG, IMG_7466.JPG, IMG_7467.JPG, IMG_7468.JPG, IMG_7469.JPG


Secretary General António Guterres and Turkish Prime Minister Binali Yıldırım at the Prime Minister’s Dolmabahçe Office, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.


Photo caption for files: IMG_7495.JPG, IMG_7496.JPG

Secretary General António Guterres and the UN delegation at the working dinner with Turkish Prime Minister Binali Yıldırım, Turkish Foreign Minister Mevlüt Çavuşoğlu, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.

Photo caption for files: IMG_7514.JPG, IMG_7523.JPG, IMG_7525.JPG, IMG_7526.JPG, IMG_7527.JPG, IMG_7529.JPG, IMG_7532.JPG, IMG_7533.JPG, IMG_7535.JPG, IMG_7537.JPG

Secretary General António Guterres and Turkish Prime Minister Binali Yıldırım, at the joint press conference, Istanbul, Turkey, 10 February 2017, Photo: UNIC Ankara.

நாளை ஆரம்பமாகும் ஐ.நா.கூட்டத்தொடர். சிறிலங்காவுக்கு மற்றுமொரு இராஜதந்திர வெற்றி . [February 26, 2017]

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நாளை ...