Sunday, May 28th, 2017

கொழும்பு செல்லவிடாது படையினரால் தடுக்கப்பட்ட மக்கள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Published on March 6, 2013-8:48 am   ·   No Comments

கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்காக சென்ற வேளையில் வவுனியாவில் வைத்து சிறிலங்கா படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த வடமாகாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் இன்று காலை வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

காணாமல் போனோரின் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
படையினரால் மக்கள் தடுத்து வைக்கப்பட்ட காரணத்தால் அதிகாலை முதல் வவுனியா நகரசபை மைதானத்தில் தமது போராட்டத்தை நடத்திய காணாமல் போனவர்களின் உறவினர்கள் முற்பகல் 9மணிக்கு பின்னர் வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு ஊர்வலமாக சென்று மகஜர் கையளித்தனர்.

வடக்கு உட்பட காணாமல் போனவர்களின் உறவினர்கள் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். இதற்காக சுமார் 11பேருந்துகளில் நேற்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு பயணமாகினர். அவ்வேளையில் அவர்களை வவுனியாவில் வைத்து கொழும்பு செல்லவிடாது தடுத்து வவுனியா பொது மைதானத்தில் கடந்த இரவு தடுத்து வைத்திருந்தனர்.

சிறிலங்கா படையினருக்கும் அரசாங்கத்திற்கும் எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை தடுக்கும் வகையில் சிறிலங்கா படையினர் கொழும்பு செல்லவிடாது தடுத்து வைத்துள்ளனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...