Monday, May 22nd, 2017

சுவிஸில் அறிவுதிறனை அதிகரிக்கும் முருங்கை இலை மூலிகை மென்பான தயாரிப்பில் ஈழத்தமிழர்

Published on December 16, 2013-10:31 am   ·   No Comments

அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.  ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் இபிஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

ஏற்றம் என்ற மூலிகை தேனீரை தயாரித்து சுவிஸ் மக்களிடம் அறிமுகமான இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியாக முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத முருங்கை ஊக்கசக்தி மென்பானம் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக சுதாகர் பரமேஸ்வரன் தெரிவித்தார்.

தமது முன்னைய தயாரிப்பான ஏற்றம் மூலிகை தேனீரை விநியோகம் செய்த சுவிஸின் பிரதான அங்காடி விற்பனை நிலையமான கோப் நிறுவனம் இந்த மென்பானத்தையும் சந்தைப்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.  வெறும் தொழில்துறை உற்பத்தியாக அல்லாது ஆரோக்கியத்தை முன்வைத்தது அனைவரும்பருகும் வகையில் ஏற்றம் மூலிகைத்தேனீர் தயாரிக்கப்பட்டது போல இந்த பானமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முருங்கை இலை மூளை வளர்ச்சிக்கும் அறிவுதிறனை அதிகரிப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. முருங்கை இலையை வெறுமனே உண்ணமுடியாது. இதனால் இதனை மூலப்பொருளாக கொண்டு இந்த பானம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் சுவிஸ் மக்களிடையே இது பெரிதும் வரவேற்பை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

சூரிச் நகரை தலைமையகமாக கொண்ட இந்த நிறுவனம் ஆயுர்வேதத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு சுகாதார மையமாகும்.  இந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் சுதாகர் பரமேஸ்வரன் எழுதிய மூலிகைகளின் பயன்பாடு பற்றிய குறிப்பை எமது மருத்துவ பகுதியில் பார்வையிடலாம்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran 2

ஆயுதப்போராட்டம் காரணமாக கல்விமான்களை மதிக்காத நிலை தோன்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செவ்வி. VIDEO [May 22, 2017]

இப்போது என் மீது வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது எந்த ...
polanaruwa

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல். [April 16, 2017]

சிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது ...
selva

மட்டக்களப்பில் தந்தை செல்வா 40ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – சுமந்திரன் உரையாற்றுகிறார். [April 12, 2017]

தந்தை செல்வா என தமிழ் மக்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் ...
IMG_9656

சுவிட்சர்லாந்தில் ஊரி மாநில தமிழ் மக்களின் 25ஆவது ஆண்டு விழா [April 11, 2017]

சுவிட்சர்லாந்து ஊரி மாநிலத்தில் தமிழ் மக்கள் குடியேறி 25ஆண்டுகள் பூர்த்தியாவதை ...
army

இராணுவ கோப்ரல் மர்ம மரணம்-விசாரணை ஆரம்பம். [April 10, 2017]

இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் ...
Arulanantham

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் காலமானார். [April 9, 2017]

தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். ...
kirupakaran

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளன. [April 8, 2017]

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் ...
His_Master's_Voice

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.? – ராம். [April 7, 2017]

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக ...
kirupa

நெடுந்தீவு சிறுமி படுகொலை- ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபாவுக்கு மரணதண்டனை தீர்ப்பு [April 7, 2017]

நெடுந்தீவில் 12வயதுடைய சிறுமி லக்சாயினியை பாலியல் பாலத்காரம் செய்து படுகொலை ...
Netherlands Court

விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த 5பேருக்கு 20ஆண்டுகால சிறை- நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு . [April 5, 2017]

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ...