Saturday, February 17th, 2018

பங்களாதேஷில் பொதுத்தேர்தல் -6பேர் பலி-136 வாக்குசாவடிகளுக்கு தீ.

Published on January 5, 2014-12:52 pm   ·   No Comments

_72087233_j8q57l26எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், பங்களாதேஷில் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் கடும் வன்முறைகளுக்கு மத்தியில் நடைபெற்றது. காலை 8மணிக்கு ஆரம்பமான வாக்குபதிவு 4மணியுடன் நிறைவடைந்தது.  எதிர்க்கட்சித் தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்த மோதல்களில் சுமார் ஆறுபேர் இன்று கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் பல நாட்களாக நடந்த வன்செயல்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல்கள் நடக்கும்போது ஆட்சியில் இருக்கும் அரசு பதவி விலகி, பக்கசார்பற்ற இடைக்கால அரசு ஒன்றின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படும் வழக்கத்தை , தற்போது ஆளும் அவாமி லீக் அரசு மாற்றியதைக் கண்டித்து, எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியினர் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

நாடாளுமன்றத் தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் எதிர்க்கட்சியினர் யாரும் போட்டியிடாததால், ஆளும் கட்சியின் வேட்பாளர்களே வெற்றி பெற்றதாக முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கவில்லை.

உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கிறது.

எதிர்க்கட்சியான, பங்களாதேஷ் தேசியக் கட்சி, நேற்றிலிருந்து இரண்டு நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. தேர்தல்களை ஒரு ‘ மோசடியான கேலிக்கூத்து’ என்று எதிர்க்கட்சித் தலைவி கலீதா ஸியா வர்ணித்தார்.

அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தமது கண்காணிப்பாளர்களை அனுப்ப மறுத்துள்ள நிலையில், இந்தத் தேர்தலின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
136 வாக்குச்சாவடிகள் இன்று தீ வைத்து எரிக்கப்பட்டன._72087233_j8q57l26_72086891_c6mic065_72085901_oiq8xccg

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...
TNA

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் [February 8, 2018]

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது ...