Friday, June 23rd, 2017

கதிர்காம பாதயாத்திரை குழுவினர் காரைதீவை சென்றடைந்தனர்.

Published on June 14, 2014-4:51 pm   ·   No Comments

KATHARAGAM PILGRIMS FROM JAFFNA1தொண்டமானாறு செல்வச்சந்திதி ஆலயத்திலிருந்து கடந்த மே 10ஆம் திகதி ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதயாத்திரைக்குழுவினர் காரைதீவை சென்றடைந்தனர்.

வருடாந்தம் கதிர்காம பாதயாத்திரைக்கு தலைமைதாங்கி நடாத்திவரும் காரைதீவு ஸ்ரீநந்தவனப் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா ச.மகேஸ்வரன் (வேல்சாமி )இம்முறை 15வது தடவையாக பாதயாத்திரை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாதயாத்திரைக்குழுத்தலைவர் வேல்சாமியிடம் திகதி மாற்றம் பற்றிகேட்டபோது:
கடந்த தடவையும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது. அப்போது பாதயாத்திரைக்குழு முல்லைத்தீவில் தரித்திருந்தவேளையில் இம்மாற்றச்செய்தி கிடைத்தது. ஆனால் இம்முறை ஆரம்பமாகமுதலே மாற்றச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம் ஜூலை மாதம் 29ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது என பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பின்பு கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே சசீந்திர ராஜபக்ஸ விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் ஆடிவேல்விழா உற்சவம் ஜூன் மாதம் 28ஆம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 13ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது என கூறியிருந்தார்.

இது எமக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது இதனால் நாம் மே 29இல் ஆரம்பிக்க திட்டமிருந்த பாதயாத்திரையை முன்கூட்டியே நடாத்தவேண்டிய அவசரநிலைமைக்குத் தள்ளப்பட்டோம். அதன்படி பாதயாத்திரை கடந்த மே 10ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

ஒரு மாத காலத்தின்பின்னர் முருகன் அருளால் காரைதீவை வந்தடைந்தோம்.; அங்கிருந்து 12ம் திகதி புறப்பட்டு; 16ம் திகதி பாணமையையும் 18ம் திகதி உகந்தையையும் அடைவோம் என எதிர்பர்hக்கிறோம்.
உகந்தையிலிருந்து காட்டுப்பாதை 20 இல் திறக்கப்படுகிறது. அப்படியெனின் காட்டுக்குள் முதன்முதலாக பிரவேசித்து கதிர்காம கொடியேற்ற தினமான 28ம் திகதி அங்கு போய்ச்சேரலாமென்று முருகன் அருளால் எதிர்பார்க்கின்றோம்.என்றார்.

மேலும் கடந்துவந்த பயணம் பற்றிக்கேட்டபோது
தற்போது எமது குழுவில் 52 அடியார்கள் வருகின்றனர். இடைநடுவில்; மூன்று அடியார்கள் திரும்பிவிட்டனர். கிளிவெட்டியில் வைத்து நாய் கடித்த கொழும்பைச் சேர்ந்த அடியார் மற்றும் சுகயீனம் காரணமாக இரு அடியார்களும் வீடு திரும்பினர்.

பயணம் சுகமாகவிருந்தது. போகுமிடமெல்லாம் முருகனருளால் நல்லவரவேற்பு. என்றார்.
கதிர்காமத்திற்கான பாதயாத்திரையை வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து பல குழுக்கள் வருடாந்தம் மேற்கொண்டுவருகின்றபோதிலும் யாழ்ப்பாணத்திலிருந்து கூடிய காலத்தில் சமய ஆசாரப்படி முறைப்படி பாதயாத்திரையை பக்திமுக்தியுடன் மேற்கொண்டுவருவது வேல்சாமி தலைமையிலான குழுவினர் என்றால் அனைவரும் அறிவர்.

1999 களில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக் ஹரிகனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பாதயாத்திரை இம்முறை 15வது தடவையாக நடைபெறவுள்ளது. 1999 இலிருந்து தொடர்ந்து 09வருடங்கள் தலைமை தாங்கி நடாத்திவந்த பற்றிக் ஹரிகன் 2007 இல் தமது தலைமைப்பொறுப்பை காரைதீவைச்சேர்ந்த வேல்சாமியிடம் ஒப்படைத்தார் .அன்றிலிருந்து இன்றுவரை வேல்சாமி தலைமையில் இவ்யாத்திரை ஒவ்வொரு வருடமும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
யுத்தம் முடிந்து சமாதானம் தோற்றுவிக்கப்பட்ட பிற்பாடு யாழ்ப்பாணத்திலிருந்து 3ஆவது தடவையாக இம்முறை இப்பாதயாத்திரை மேற்கொள்ளப்பட முருகன் அருள் பாலித்துள்ளான் என ஏற்பாட்டாளர் வேல்சாமி தெரிவித்தார்.KATHARAGAM PILGRIMS FROM JAFFNA3KATHARAGAM PILGRIMS FROM JAFFNA2KATHARAGAM PILGRIMS FROM JAFFNA4KATHARAGAM PILGRIMS FROM JAFFNA1KATHARAGAM PILGRIMS FROM JAFFNA

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...
sumanthiran 2

ஊழல் செய்த குற்றவளிகளை காப்பாற்ற விக்னேஸ்வரன் முற்பட்டார்- சுமந்திரன் விசேட அறிக்கை [June 16, 2017]

ஊழல் செய்த குற்றவளிகளை காப்பாற்ற விக்னேஸ்வரன் முற்பட்டார். அதனாலேயே எமது ...
vicki

ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு துணை போன வடமாகாண முதலமைச்சர். [June 12, 2017]

இலங்கையில் உள்ள மாகாணசபைகளில் வடமாகாணசபையே முன் உதாரணமாக திகழ வேண்டும். ...
analagan

வடமாகாணத்தில் முதன் முறையாக ஆணழகன் போட்டி VIDEO [June 11, 2017]

வடமாகாண முதலாவது  ஆணழகன் போட்டி யாழ்.மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் உடற்திறன் ...