Wednesday, March 29th, 2017

பிரான்ஸ் நீஸ் நகரில் தாக்குதல் நடத்தியவர் துனிசியாவை பூர்வீகமாக கொண்ட இஸ்லாமிய பயங்கரவாதி.

Published on July 15, 2016-8:44 am   ·   No Comments

franceபிரான்ஸ் நீஸ் நகரில் மக்கள் கூட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி 85க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்த நபர் துனிசிய நாட்டை பூர்வீகமாக கொண்ட 31வயதுடைய முஸ்லீம் நபர் என்றும் இவர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என பிரான்ஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவரின் அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளது. இவர் பிரான்ஸ் நாட்டு குடியுரிமை பெற்றிருந்தார்.

பிரான்ஸ் நீஸ் நகரில் வியாழன் நள்ளிரவு 11மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதி ஒருவன் மக்கள் குழுமியிருந்த கூட்டத்தில் ஹண்டைனர் லொறியை ஏற்றியதில், 85 பேர் பலியாயினர்; 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இறந்தவர்களில் சிறுவர்கள் பெண்களும் அடங்குகின்றனர். 18பேர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் தேசிய விடுமுறை நாளான பாஸ்டில் தின கொண்டாட்டத்தையொட்டி, நீஸ் நகரில் நதிகரையை அண்டிய பகுதியில் நடந்த வாண வேடிக்கையை காண ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர்.

அங்கு ஹண்டைனர் லொறி ஒன்று வேகமாக செலுத்தி வந்து மக்கள் மீது மோதியது. சமகாலத்தில் லொறியை செலுத்தி வந்த நபர் மக்கள் கூட்டத்தில் குண்டை வீசியதுடன் துப்பாக்கி பிரயோகமும் செய்தார்.

ஹண்டைனர் லொறியை ஓட்டி வந்த பயங்கரவாதி அதிக வேகத்தில் வந்து கூட்டத்தில் 2 கிலோ மீற்றர் வரை வொறியை செலுத்தியதாகவும், பின் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் அப்பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளார்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் எனவும், ஹண்டைனர் லொறியில் கையெறி குண்டுகளும், ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவர் துனிசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர் என பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லோறியை சோதனையிட்ட போது கனரக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு கைக்குண்டுகள் ஏ.கே.47 மற்றும் பல கனரக ஆயுதங்கள் பாரஊர்திக்குள் இருந்துள்ளன. இது இஸ்லாமிய பயங்கரவாதிகளான தயேஸின் தாக்குதல் எனப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

மிகவும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் ஏற்கனவே அமலில் உள்ள அவசர நிலை மேலும் மூன்று மாத காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி பிரான்ஸ் பரிஸ் நகரில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூடு கைக்குண்டு வீச்சுக்களில் சுமார் 130பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இத்தாக்குதலை ஐ.எஸ்.என்று அழைக்கப்படும் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தினர் நடத்தியிருந்தனர்.francefrance 2france 1france 3

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...