Sunday, May 28th, 2017

தமக்கு வேலை வழங்குமாறு முன்னாள் விடுதலைப்புலிகள் இராணுவத்திடம் வேண்டுகோள்

Published on January 2, 2017-1:07 pm   ·   No Comments

former-ltte-5இராணுவத்தின் ஒரு பிரிவான சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தங்களுக்கு வேலை வழங்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் இன்று காலை கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு முன்னால்  ஒன்று திரண்டு வேண்டுகோள் விடுத்தனர்.

சிவில் பாதுகாப்பு பிரிவின் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்கவிடம் இந்த வேண்டுகோளை விடுத்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் வேலை வழங்கப்படுவதாக யாரோ பரப்பிய செய்தியை அறிந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண் முன்னாள் விடுதலைப்புலிகள் தாங்கள் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்த காலம் முதல் நிரந்தர தொழில் இன்றி பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் வாழ்ந்து வருவதாகவும், தங்களுக்கு இராணுவத்தின் கீழ் இயங்கும் சிவில் பாதுகாப்பு பிரிவில் வேலை வழங்குமாறும் கோரி நின்றனர்.

இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவில் புதிதாக ஆட்கள் எடுப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும் அதனடிப்டையில் இன்று (02) தேசிய அடையாள அட்டை மற்றும் புனர்வாழ்வு பெற்று விடுதலையான கடிதம் ஆகியவற்றுடன் வருமாறு தகவல் வெளியாகியிருந்தது.
அதற்காகவே இங்கு வந்திருகின்றோம். எனவே எங்களுக்கு வேலை தாருங்கள் என கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்கவிடம் கோரிநின்றனர்.

இராணுவ சிவில் பாதுகாப்பு பிரிவில் இணைந்து கொண்டவர்களுக்கு 30ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் இணைந்து கொண்ட முன்னாள் விடுதலைப்புலிகள் இப்போது வசதியாக இருக்கின்றனர். இதன் மூலம் அந்தக் குடும்பங்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். எனவே அவ்வாறானதொரு நிம்மதியான வாழ்க்கையை ஏனைய முன்னாள் போராளிகளும் பெற்றுக்கொள்ள எங்களுக்கும் இராணுவத்தில் வேலை தாருங்கள் எனத் தெரிவித்தனர்.

நாங்கள் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு கோரினால் முன்னாள் போராளிகளுக்கு தானே சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் வேலை இருக்கிறது என்றார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு வேலை வழங்க மறுக்கின்றனர். ஆனால் இராணுவத்திலும் முன்னாள் போராளிகளான எங்ளுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கின்றீர்கள். என முன்னாள் விடுதலைப்புலிகள் கவலை தெரிவித்தனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி கட்டளை அதிகாரி மேஜர் சாகர வீரசிங்க கருத்து தெரிவித்த போது, இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு புதிதாக ஆட்கள் எடுப்பதாக வெளியான தவறான தகவலை அடிப்படையாக கொண்டு நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் ஒன்று கூடியுள்ளனர்.

சிவில் பாதுகாப்பு பிரிவை பொறுத்தவரை தற்போதைக்கு புதிதாக ஆட்கள் எவரையும் உள்வாங்கும் நிலையில் இல்லை. இந்த முன்னாள் போராளிகளை பார்க்கும் போது கவலையாக இருக்கிறன்றது. இந்த விடயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது. இராணுவ தலைமை அலுவலகமே இதனை தீர்மானிக்க முடியும் என கிளிநொச்சி கட்டளை அதிகாரி தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறிய முன்னாள் விடுதலைப்புலிகள் இரணைமடுச் சந்தியில் சிறிலங்கா இராணுவத்தில் வேலை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றிலும் ஈடுபட்டனர். இதன் போது சில பெண் முன்னாள் போராளிகள் குழந்தைகளுடன் வேலைவாய்ப்பு கோரி காத்திருந்த பரிதாபமான சம்பவங்களும் இடம்பெற்றது.former-ltteformer-ltte-1former-ltte-2former-ltte-3former-ltte-4former-ltte-5

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...