Sunday, May 28th, 2017

கொள்கையே இல்லாத அமிர்அலிக்கு தமிழர்களை பற்றி கதைக்க என்ன அருகதை இருக்கிறது

Published on January 4, 2017-7:25 pm   ·   No Comments

janaகொள்கையே இல்லாத கட்சியில் உள்ள கொள்கை இல்லாத அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அடிப்படை அறிவு அற்றவர்கள் எனக் கூறுவது கேலிக்கூத்தாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்கேணி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்பள்ளி திறப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இன்று ஆறு உறுப்பினர்கள் உள்ளனர்.

நாங்கள் மத்திய, மாகாண அரசுகளினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் பிரதேச, மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களிலும் பொது நிகழ்வுகளிலும் தெளிவுபடுத்தி வருகின்றோம்.

ஆனால் அடிப்படை அறிவற்றவர்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இருப்பதாக அமிர்அலி கடந்தவாரம் காத்தான்குடியில் வைத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அடிப்படை அறிவு அற்றவர்களாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் செயற்படவில்லை என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். அடிப்படை அறிவு என்றால் என்ன? கொள்கை என்றால் என்ன என்பதை அமீர் அலி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

பிரதியமைச்சர் அமீரஅலி, அவர் உள்ள கட்சியின் நிலை மற்றும் அதன் அரசியல் நிலையை சற்று திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஒரு கொள்கையே இல்லாத கட்சியில் உள்ள ஒரு கொள்கையே இல்லாத அமைச்சர் மற்றும் ஒரு கொள்கையே இல்லாத மக்கள் பிரதிநிதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறுவது கேலிக்கூத்தாகும். ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்கு பின்னர் மக்கள் காங்கிரஸ் என கட்சி தாவிச் சென்றார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மாறி ஒரே நாளில் மைத்திரியின் பக்கம் தாவியவர் இந்த கொள்கை இல்லாத அமைச்சர். மட்டக்களப்பு மாவட்ட இணைத் தலைவராக இருந்து கொண்டு அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி விட்டு ஊடகவியலாளர்களை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு உள்வாங்க மறுத்திருந்தார்.

இந்த பிரதியமைச்சரின் கூற்றுக்கு எதிராக கிழக்கு மாகாணசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் யோகேஸ்வரன் குரல் கொடுத்தன் காரணமாக ஊடகவியலாளர்கள் அந்த கூட்டத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.

ஊடகவியலாளர்களை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திற்கு அழைக்காமல் நாங்கள் கூட்டம் நடாத்துவதாக இருந்தால் அங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பொதுமக்களுக்கு தெரியாத நிலையே இருக்கும்.

பாராளுமன்றத்தில் நடப்பவைகளை நேரடி ஒளிபரப்பு செய்து நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் போது தாங்கள் செய்யும் முறைகேடான செயல்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக ஊடகவியலாளர்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டது என்பதை இதன் போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அந்த விடயத்தினை தட்டிக்கேட்டதற்காக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அடிப்படை அறிவு அற்றவர்கள் என்று கூறும் இந்த அமைச்சருக்கு அடிப்படை அறிவு உள்ளதா என்பதை அவர் தன்னைத்தானே கேட்கவேண்டும் என கோவிந்தன் கருணாகரம் இதன்போது கேள்வி எழுப்பினார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், சிறப்பு அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.janajana-1jana-2

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...