Sunday, May 28th, 2017

சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைய வேண்டும் -இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

Published on January 10, 2017-1:11 pm   ·   No Comments
hisbullahசமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள சவால்களை முறியடிக்க முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்கள் மறந்து ஒன்றுபட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. வில்பத்து, பொத்தானை போன்ற சம்பவங்கள் அதற்கு சிறந்த உதாரணங்களாகும். இவ்வாறான முஸ்லிம் விரோத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவற்றுக்கு அரசியல் ரீதியில் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் எம்.பிக்கள் இருந்த போதிலும் எம்மிடையே ஒற்றுமை இல்லை. அதனாலேயே இந்நிலை உருவாகியுள்ளது.  ஒவ்வொரு பிரச்சினையும் ஒவ்வொருவரும் தனித்தனியாக பேசுவதால் எந்த பலனும் – தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
இந்நிலை மாற வேண்டும். வில்பத்து, பொத்தானை மாத்திரமல்ல முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து பிரச்சினைகளையும் பொதுவான பிரச்சினையாக பார்த்து அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு நாங்கள் ஒன்றுபட்டால் மாத்திரமே எமக்கு எதிரான சவால்களை முறியடித்து நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து ஒன்றினைவது சமூக நோக்கத்துக்காகவே. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக அல்ல. தேர்தல் வரும் போது அவர் அவர் தத்தமது கட்சிகளினூடாக அரசியல் மேற்கொள்ளட்டும். ஆனால், சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஒற்றுமையாக எதிர்கொள்வதே காலத்தின் தேவையாகவுள்ளது.
இது தொடர்பில் முஸ்லிம் சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள், உலமாக்கள் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிம் அரசியல் தலைமைகளின் ஒற்றுமையை அது வலியுறுத்த வேண்டும். அதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். – என்றார். hisbullah

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...