Wednesday, March 29th, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்யும் திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published on February 15, 2017-10:13 am   ·   No Comments

sumanthiranநாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்யும் திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைத்துள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கிளிநொச்சி நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இதற்காக சந்தேக நபர்களை தமது பொறுப்பில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள விடுதலை புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒருவரான வேலாயுதம் விஜயகுமார் என்பவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்து விசாரணை செய்ய உள்ளனர்.

எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு வெளியில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்பு விசாரணையாளர்களால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அனுமதி கிளிநொச்சி நீதிவான் ஏ. ஆனந்த ராஜாவிடம் பெறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கிளைமோர் குண்டு வைத்து கொலை செய்ய திட்டமிட்டனர் எனக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களான காராளசிங்கம் குலேந்திரன், வேலாயுதம் விஜயகுமார், முருகையா தவதேவன், மரியநாயகம் லுவிஸ் அஜந்தன், மதன் எனப்படும் சந்திரசேகரலிங்கம் வாசுதேவன் ஆகியோர் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.

பயங்கரவாத புலனயவுப் பிரிவு தலைமையகத்தின் ஆலோசனையின் கீழ் செயற்பட்ட மூவர் கொண்ட சிறப்பு பொலிஸ் குழு கடந்த ஜனவரி 14ஆம் திகதி இரவு கிளிநொச்சியில் வைத்து 32 வயதுடைய முன்னாள் போராளியான முருகையா தவவேதனை கைது செய்தனர்.

தொடர்ந்து ஜனவரி 16ஆம் திகதி கிளிநொச்சியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வைத்து முன்னாள் போராளியான 37 வயதுடைய காராளசிங்கம் குலேந்திரன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவரே மாஸ்டர் எனும் பெயரில் தகவல் வழங்கிய முன்னாள் போராளியுடன் தொடர்புபட்டவர் என்பதைக் கண்டறிந்த பொலிஸார் கைதான இருவரையும் வவுனியா பயங்கரவாத புலனயவுப் பணியகத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் தெரியவந்த தகவல்களுக்கு அமைவாக மாஸ்டர் என்பவரின் உறவுக்காரர் ஒருவரின் கிளிநொச்சி ஊற்றுப்புலம் பகுதியில் உள்ள வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். இதன் போதே அங்கிருந்து இரு சக்தி வாய்ந்த கிளைமோர் குண்டுகளை பொலிஸார் கைப்பற்றினர்.

தொடர்ந்து திருகோணமலையில் உள்ள வீட்டில் வைத்து மதன் எனப்படும் சந்திரசேகரலிங்கம் வாசுதேவன் எனும் முன்னாள் போராளியும் மருதங்கேணி கிழக்கில் உள்ள வீட்டில் வைத்து மரியநாயகம் லெவிஸ் அஜந்தன் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர்.

இவர்களைக் கைது செய்யும் போது அவர்களிடம் போதைப்பொருள்களும் இருந்ததாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கைதானவர்கள் அனைவரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுsumanthiran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...