Friday, October 20th, 2017

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும்- கிழக்கு முதலமைச்சர் பிரித்தானிய தூதுவரிடம் கோரிக்கை

Published on February 15, 2017-1:08 pm   ·   No Comments

British 3வடக்கு கிழக்கில் படையினர் வசமுள்ள காணிகள் இன்னும் விடுவிக்கப்படாததால் தமிழ் முஸ்லீம் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தலைமையிலான குழுவினரிடம் தெரிவித்தார்.  இச்சந்திப்பு திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண அமைச்சர்களான ஏ.எல்.எம் நசீர், ஆரியவதி கலப்பதி மற்றும் முதலமைச்சரின் செயலாளர் யூ.ஏ.எல் அஸீஸ் ஆகியோரும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த அமைச்சர்களோ அல்லது மாகாணசபை உறுப்பினர்களோ இந்த சந்திப்புக்கு அழைக்கப்படவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்தும் கூட வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் விடுவிக்கப்படாதிருப்பதானது தேசிய நல்லிணக்கத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் இம்முறை குறைக்கப்பட்டுள்ளதால் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளை அபிவிருத்து செய்வதில் பாரிய சிக்கல் தோன்றியுள்ளதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதன் மூலமே அரசாங்கம், சிறுபான்மையினரின் நம்பிக்கையை வெற்றி கொள்ள முடியும் எனவும் அரசியலமைப்புத் திருத்தத்தினூடாக சிறுபான்மையினரின் அபிலாஷைகள் மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுத்தக் கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படுவதன் ஊடாகவே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் எனவும் இதன்போது பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு முதலமைச்சர் விளக்கிக் கூறினார்.

கிழக்கு மாகாண கல்வித்துறையை மேம்படுத்துவதற்கான உதவி நிகழ்ச்சித் திட்டமொன்றை பிரித்தானிய உருவாக்கித்தர முன்வர வேண்டும் என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை கிழக்கின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் இங்கு பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்குமான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.British 1British 2British 3

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...