Friday, December 15th, 2017

தமிழ் எம்.பிக்கள் ஒன்றியத்துக்கு ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். பச்சைக்கொடி! – ஐ.தே.க., புளொட், இ.தொ.கா. பரிசீலிப்பு

Published on February 15, 2017-5:40 pm   ·   No Comments
tna-protest-in-Vavuniya-2தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தை அமைக்கும் நோக்கில்  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்முன்வைத்துள்ள யோசனைக்கு தமிழ் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
“ஒற்றுமை என்பதே தமிழருக்கு எஞ்சியிருக்கும் மிகப்பெரிய ஆயுதமாகும்.எனவே,கூட்டாகச் செயற்பட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்க் கட்சிகள் முன்வரவேண்டும்” என்று சிவில் அமைப்பு பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி ‘தமிழ் எம்.பிக்களின் ஒன்றியம்’ யோசனைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவரரும்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான  செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., முன்னாள் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.எல்.ஆர்.எவ் ஆகியன பச்சைக்கொடி காட்டியுள்ளன.
 இது தொடர்பில் தமது கட்சி பரிசீலித்து வருகின்றது எனவும், விரைவில் சாதகமான முடிவுவொன்று அறிவிக்கப்படும் எனவும் புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் எம்.பி. அமைச்சர் மனோவிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத சிறு தமிழ்க் கட்சிகளும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் யோசனைக்கு ஆதவை வழங்க முன்வந்துள்ளன.  எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி இது பற்றி தனது முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.
“நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் எம்.பியிடம் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டபோதிலும் இன்னும் பதில் எதுவும் கிடைக்கவில்லை” என்று அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.  தமிழரசுக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளபோதிலும் தலைமைப்பீடத்திடமிருந்து பதில் எதுவும் வராததால் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை.
நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 16 எம்.பிக்கள் இருக்கின்றனர். ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று தமிழ் எம்.பிக்கள் இருக்கின்றனர்.
“தமிழ் நாடாளுமன்ற உறுப் பினர்களின் ஒன்றிய யோசனை குறித்து எமக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை. அழைப்பு விடுக்கப்பட்டால் பரிசீலிக்கலாம்” என்று  ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட எம்.பி. வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில் போட்டியிட்ட இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் இரண்டு எம்.பிக்களைக்  கொண்டுள்ளது. இந்நிலையில், மேற்படி யோசனை பற்றி அதன் தலைவர் முத்துசிவலிங்கத்திடம் வினவியபோது, அவர் கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி 6 எம்.பிக்களையும், ஈ.பி.டி.பி. ஒரு எம்.பியையும் கொண்டுள்ளன. இலங்கையில் தற்போதைய நாடாளுமன்றத்தில் மொத்தமாக 28 தமிழ் எம்.பிக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
( Thanks Tele.org )tna-protest-in-Vavuniya-2

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...
HDRLanka (16)

இலங்கையில் பல்சமய இல்லம் [December 10, 2017]

நல்லிணக்கம் என்ற பெயருக்கு பின் உள்ள திரைமறைவு நகர்வுகளை இட்டு ...
TNA me

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பங்கு பிரிப்பில் குழப்பம்- அவசரமாக கூடுகிறது ரெலோ. [December 4, 2017]

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சில சபைகளில் கூடிய ஒதுக்கீடுகளை தமக்கு ...
NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...