Wednesday, March 29th, 2017

த.தே.கூட்டமைப்பை விமர்சிப்பவர்கள் பதவியை இராஜினாமா செய்து விட்டு வெளியிலிருந்து விமர்சிக்க வேண்டும்.

Published on February 16, 2017-11:05 am   ·   No Comments

????????????????????????????????????

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் உண்மையான அரசியல்வாதிகளானால் கட்சியின் கொள்கை பிடிக்கவில்லையெனில் கூட்டமைப்பால் கிடைத்த பதவியை இராஜநாம செய்துவிட்டு வெளியிலிருந்து விமர்சிக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி குமாரவேலியர் கிராமத்தில் 10 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட மீனவர் கூட்டுறவுக் கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு புதன்கிழமை 15.02.2017 நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – இந்த நாட்டிலே மக்களினம் சுதந்திரமாக உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து போராடிக்கொண்டிருக்கிறோம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன ஆனால் அதில் எமது தலைமைத்துவங்கள் ஏமாற்றப்பட்டுவந்து தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜதந்திர ரீதியில் எமது நகர்வுகளை முன்னெடுக்கிறது.

தமிழ் மக்களுக்கு தற்போது உள்ள கட்சிக்கு மாற்றீடாக புதிய தலைமை ஒன்று தேவை மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சியின் தலைவர் கூறியுள்ளார்.
சிலரது அரசியல் மீள்பிரவேசத்துக்கா? புதிதாக அரசியல் தொடங்குவதற்கா? தமிழ் மக்கள் மத்தியில் மேலும் குழப்பங்களை உருவாக்குவதற்கா? புதிய தலைமை தேவைப்படுகின்றது என நாங்கள் நிதானமாக சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

கட்சியின் கொள்கைக்குட்பட்டு அக்கட்சியினால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு ஒரு கட்சியில் தேர்தலில் போட்டியிடுகின்றோம் என்றால் வென்றதன் பின்பும் கட்சியின் கொள்கையும் தேர்தல் விஞ்ஞாபனமும் எங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் உண்மையான அரசியல்வாதியானால் அந்த கட்சி மூலம் கிடைத்த பதவியை இராஜநாம செய்துவிட்டு வெளியில் இருந்து விமர்சிப்பதுதான் ஜனநாயகத்துக்கு அழகு.

தமிழ் மக்களின் போராட்டங்கள் வடிவங்கள் மாறாலாம் கொள்கை மாறாது. சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது காலிமுகத் திடல் மட்டக்களப்பு யாழ்ப்பாண கச்சேரிகள் வரை இலங்கை தமிழரசுக் கட்சியினால் போராட்டங்கள முன்னெடுக்கப்பட்டன. அதன் பின்பு ஆயுதப்போராட்டம் வந்தது 2009ன் பின்பு இராஜதந்திர ரீதியில் போராடிக்கொண்டிருக்கிறோம் ஒரு இலக்கினை அடைய வேண்டுமானால் எமது சில யுத்திகளைப் பயன்படுத்தி செயற்பட வேண்டும்’ என கருணாகரன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

????????????????????????????????????

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...