Saturday, June 24th, 2017

இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை அதிகரிக்க ஐ.நாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒத்துழைப்பு

Published on February 16, 2017-11:47 am   ·   No Comments

EUஇலங்கையில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை அதிகரிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பும், ஐரோப்பிய ஒன்றியமும் வாக்குறுதியளித்துள்ளன என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணைப்பாளர் ஹூனா மெக்கோலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுலாய் மார்க் ஆகியோர் தன்னை சந்தித்து இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர் என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் வடக்கு மாகாண சபையின் நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது அதிகமாக பேசப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டிய தேவை மற்றும் வடக்கு மாகாண சபைக்கு கிடைத்த அதிகாரங்கள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது குறித்து வடக்கு மாகாண முதலமைச்சர் முன்வைத்த யோசனைகள் மற்றும் கருத்துக்கள் அனுகூலமான மட்டத்தில் இருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.EU

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...