Thursday, August 17th, 2017

கொழும்பில் 10க்கு மேற்பட்ட பாதாள உலக குழுக்கள் இயங்கி வருகின்றன

Published on February 16, 2017-11:50 am   ·   No Comments

SriLanka-Tamils-vote-gunsகொழும்பில் 10க்கும் மேற்பட்ட பாதாள உலக குழுக்கள் இயங்கி வருவதாகவும் இக்குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்து வருவதாகவும் பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.  பிரதான தரப்பை சேர்ந்த 10 பாதாள உலக குழுக்கள் மீண்டும் இயங்க ஆரம்பித்து, பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுப்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில தினங்களில் மாத்திரம் பாதாள குழுக்கள் இரண்டிற்கு இடையில் இடம்பெற்ற மோதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கொட ரத்தரன், அத்துருகிரிய பண்டா, மீகொட சானா ஆகியோரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். இக் கொலைக்கள் சிறைச்சாலையில் உள்ள பாதாள உலக குழு தலைவர்களின் வழிகாட்டலில் செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 5 பாதாள உலக குழுக்கள் நுகேகொட பொலிஸ் பிரிவில் செயற்படுவதாகவும், கடுவெல சமயங், அத்துருகிரிய லசியா ஆகிய இரண்டு தரப்பிற்கு இடையில் மோதல் நிலை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய பாதாள குழுக்களை கட்டுப்பதற்வதற்கு குற்ற செயல்களுக்கு தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர்களை கைது செய்வதற்கும் கொழும்பு பொலிஸ் நிலையங்கள் அனைத்திற்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...
D._M._Swaminathan

ஈழத்தில் ஜாக்சன் துரை… [July 29, 2017]

தற்கால ஜாக்சன் துரை சுவாமிநாதனும் வீரபாண்டிய ஈழத் தமிழனும் சந்தித்தால் ...