Friday, October 20th, 2017

கோப்பாபுலவில் பொதுமக்களின் காணிகள் இருவாரங்களில் விடுவிக்கப்படும்- மீள்குடியேற்ற அமைச்சு அறிவிப்பு

Published on February 16, 2017-11:54 am   ·   No Comments

koppapulavuமுல்லைத்தீவு, கேப்பாப்புலவில் விமானப்படை முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள், இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த பகுதியில், பொதுமக்களுக்குச் சொந்தமாக எவ்வளவு காணிகள் உள்ளன? அவற்றை எத்தனைக் குடும்பங்கள் கோரியுள்ளன? முகாம் அமைந்துள்ள மொத்தக் காணியையும் விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டீ சில்வா ஆகியோர், இன்னும் ஓரிரு தினங்களில் கலந்துரையாடி, முடிவு எட்டப்பட்ட பின்னர், அந்தக் காணிகள் விடுவிக்கப்படும் முறை தொடர்பில், உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என, மீள்குடியேற்ற அமைச்சு அறிவித்துள்ளது.

காணிகள் விடுவிக்கப்படும் என்றும் போராட்டத்தைக் கைவிடுமாறும், கேப்பாப்புலவு மக்களுக்கு செவ்வாயன்று அறிவித்த போதிலும், அவர்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர். இருப்பினும், எடுத்த எடுப்பில் உடனடியாக, அந்தக் காணிகளை விடுவிக்க முடியாது. அதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதனால், மக்கள் பொறுமை காத்து, அரசாங்கத்துக்கு இரு வாரகால கால அவகாசம் வழங்க வேண்டுமென்றும், அமைச்சு கேட்டுள்ளது.

இந்த காணியை விடுவிப்பதாக, இராணுவத் தளபதி, ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார். இருப்பினும், வெறும் வாக்குறுதிகளை மாத்திரம் நம்பி, போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று, போராட்டத்தில் ஈடுபட்ட கேப்பாப்புலவு மக்கள் அறிவித்துள்ளனர்.koppapulavu

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...