Saturday, June 24th, 2017

ஐ.நா.கூட்டத்தொடரின் போது பக்க அறைகளில் 13 கூட்டங்களை நடத்த சிறிலங்கா ஏற்பாடு.

Published on February 26, 2017-10:01 am   ·   No Comments

un-genevaஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை காலை ஜெனிவா பலைஸ் வில்சன் மண்டபத்தில் ஆரம்பமாகிறது. இக்கூட்டம் மார்ச் 24ஆம் திகதிவரை நான்கு வாரங்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப அமர்வில் ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குடேர்ஸ், ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அல் ஹசன் ஆகியோரின் உரைகள் இடம்பெறும்.

இக் கூட்டத்தொடரில் முதல் இரு நாட்களும் நாடுகளின் தலைவர்கள், மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் கலந்து கொள்ளும் உயர்மட்ட அமர்வு இடம்பெறும்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர செவ்வாய்க்கிழமை உரையாற்ற உள்ளார்.
34ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை அரசாங்கம் பக்கஅறைகளில் 13 கூட்டங்களை நடத்த உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் காலத்தில் சிறிலங்கா அதிகளவு கூட்டங்களை ஏற்பாடு செய்தது இம்முறையே ஆகும்.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றம், காணிவிடுவிப்பு, முன்னாள் போராளிகளை சமூகத்துடன் இணைத்தல், சுதந்திரமான நீதிக்கட்டமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களுக்கும் இராஜதந்திரிகளுக்கும் விளக்கமளிப்பதற்காக இக் கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் மட்டுமன்றி சில ஆபிரிக்க அரசசார்பற்ற அமைப்புக்களும் இலங்கைக்கான கூட்டங்களை நடத்த அறைகளை பதிவு செய்துள்ளன.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதகரம் இலங்கையின் அபிவிருத்தி என்ற தலைப்பில் கூட்டம் ஒன்றை நடத்த ஐ.நா.மனித உரிமை பேரவையின் 21ஆம் இலக்க அறையை முன்பதிவு செய்துள்ளது. இக் கூட்டம் 3மணிக்கு ஆரம்பமாகும். இதில் கலந்து கொள்ளுமாறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுக்கு சிறிலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருக்கிறது.

இதேவேளை நிலைமாறு கால நீதிப்பொறிமுறை பற்றி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான கூட்டம் ஒன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இக்கூட்டத்தில் ஐ.நா.அறிக்கையாளர்கள் நிலைமாறு கால நீதிப்பொறிமுறையின் முன்னேற்றங்கள் பற்றி உரையாற்றுவார்கள். இதற்கு பதிலளிக்குமாறு இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

சிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு சர்வதேச நீதிவிசாரணையை நடத்த தவறிவிட்டதாகவும் இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் குற்றம் சாட்டிவரும் தமிழர் அமைப்புக்களும் இக் கூட்டத்தொடரின் போது பக்க அறைகளில் கூட்டங்களை நடத்த உள்ளளன.geneva27-011

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...