Monday, May 22nd, 2017

வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிவிசாரணை இடம்பெறுமா என்ற கேள்விக்கு மௌனம் சாதித்த மங்கள சமரவீர.

Published on March 1, 2017-5:37 pm   ·   No Comments

mangala side even 2ஐ.நா.மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகி இருக்கும் இவ்வேளையில் இன்று பக்க அறை ஒன்றில் இலங்கையின் அபிவிருத்தி என்ற தலைப்பில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா, மனோ திதவெல உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பொறுப்பு கூறல் பொறிமுறை ஏற்படுத்தப்படும் என்றும் காணாமல் போனோர் அலுவலகம் விரைவில் இயங்க ஆரம்பிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளை உள்ளடக்கிய நீதி விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. சிறிலங்கா அதிபர் அண்மையில் பேசும் போது வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை என கூறியிருந்தார். ஐ.நா.வில் நீங்கள் ஏற்றுக்கொண்டதைப்போல வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட நீதிவிசாரணை நடைபெறுமா என இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால் இக்கேள்விக்கு அமைச்சர் மங்கள சமரவீர பதிலளிக்காது அதை தவிர்க்கும் முகமாக வேறு ஒருவிடயத்தையே பேசினார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய தேசிய சமாதானப்பேரவையின் தலைவர் ஜெகான் பெரேரா ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்குவதன் மூலமே சில விடயங்களை நிறைவேற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய சமாதானப்பேரவையை சேர்ந்த ஜெகான் பெரேரா அரச பிரதிநிதிகள் குழுவுடனேயே கொழும்பிலிருந்து ஜெனிவா வந்திருந்தார். mangala side even 2mangala side evenmangala side even 3mangala side even 1jegan perera

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran 2

ஆயுதப்போராட்டம் காரணமாக கல்விமான்களை மதிக்காத நிலை தோன்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செவ்வி. VIDEO [May 22, 2017]

இப்போது என் மீது வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது எந்த ...
polanaruwa

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல். [April 16, 2017]

சிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது ...
selva

மட்டக்களப்பில் தந்தை செல்வா 40ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – சுமந்திரன் உரையாற்றுகிறார். [April 12, 2017]

தந்தை செல்வா என தமிழ் மக்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் ...
IMG_9656

சுவிட்சர்லாந்தில் ஊரி மாநில தமிழ் மக்களின் 25ஆவது ஆண்டு விழா [April 11, 2017]

சுவிட்சர்லாந்து ஊரி மாநிலத்தில் தமிழ் மக்கள் குடியேறி 25ஆண்டுகள் பூர்த்தியாவதை ...
army

இராணுவ கோப்ரல் மர்ம மரணம்-விசாரணை ஆரம்பம். [April 10, 2017]

இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் ...
Arulanantham

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் காலமானார். [April 9, 2017]

தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். ...
kirupakaran

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளன. [April 8, 2017]

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் ...
His_Master's_Voice

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.? – ராம். [April 7, 2017]

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக ...
kirupa

நெடுந்தீவு சிறுமி படுகொலை- ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபாவுக்கு மரணதண்டனை தீர்ப்பு [April 7, 2017]

நெடுந்தீவில் 12வயதுடைய சிறுமி லக்சாயினியை பாலியல் பாலத்காரம் செய்து படுகொலை ...
Netherlands Court

விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த 5பேருக்கு 20ஆண்டுகால சிறை- நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு . [April 5, 2017]

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ...