Thursday, August 17th, 2017

இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது

Published on March 3, 2017-5:54 pm   ·   No Comments

zeidஇலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் வெளியாகியுள்ளது.   2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி  வெளியிடப்பட்டுள்ளது

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு –

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் முழு அளவிலான பணியகம் ஒன்றை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.

இந்தப் பணியகத்தை அமைப்பதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும்.

இலங்கை இராணுவம் ஆக்கிரமித்துள்ள அனைத்து தனியார் நிலங்களையும் முன்னுரிமை அடிப்படையில், மீளக் கையளிக்க வேண்டும்.

வர்த்தக மற்றும் பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடுகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளைத் தழுவி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஃ1 தீர்மானத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய, நிலைமாறு கால நீதி தொடர்பாக கடப்பாடுகளை கால வரம்புடன் நிறைவேற்றுவதற்காக விரிவான ஒரு மூலோபாயத்தை வகுக்க வேண்டும்.

அதில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பேரவைக்குச் சமர்ப்பித்துள்ள முன்னைய அறிக்கைகள் மற்றும் தற்போதைய அறிக்கையின் பரிந்துரைகள் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக அல்லது தனியாக ஐ.நா மனிதஉரிமைகள் பொறிமுறைகளின் முக்கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தெளிவான திட்டம் ஒன்று தயாரிக்க வேண்டும்.

நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளை வடிவமைக்கும் செயல்முறை, விடயத்தில் பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்களின் குழுக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும்.

உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள நிகழாமையை உறுதிப்படுத்தும், சிறப்பு அறிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, இந்தச்செயல்முறையில் அவருடன் தொடர்ந்து இணைந்து செயற்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட சட்டவரைவுகளுக்கான ஆலோசனை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட, ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு பிரதிநிதிகளை இலங்கைக்கு அழைக்க வேண்டும்.

சித்திரவதை, பாலியல் வன்முறைக, ஏனைய மனித உரிமை மீறல்கள் தடை செய்யப்பட்டுள்ளன, அவை குறித்து விசாரிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்படும்,

மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மீதான எல்லா வகையான கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்களையும், பாதுகாப்புப்படைகள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இராணுவம், புலனாய்வுப் பிரிவு, காவல்துறைக்கு தெளிவான உத்தரவுகள் பகிரங்கமாக விடுக்கப்பட வேண்டும்.zeid

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...