Tuesday, June 27th, 2017

ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள இலஙகை தொடர்பான புதிய தீர்மான நகல் வெளியானது.

Published on March 4, 2017-8:13 am   ·   No Comments

UNO GENEVAபோருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல் உள்ளிட்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவுக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கும், புதிய தீர்மான வரைவு வெளியாகியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 அவது அமர்வில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த வரைவுத் தீர்மானம் நேற்றிரவு ஜெனிவாவில், பேரவையின் உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

இதன்படி, 2015ஆம் ஆண்டு தீர்மானத்தின் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விரிவான அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும், பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிப்பார்.

2015 ஐ.நா தீர்மானத்தில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30/1 தீர்மானத்தில், உண்மை கண்டறியும் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பொறிமுறைகளை அமைக்க வேண்டும் என்றும், போரின் போது இழைக்கப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நீதுிபதிகளின் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கு பரந்தபட்ட அளவில் சட்ட மற்றும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

நேற்று வெளியாகியுள்ள தீர்மான வரைவின் முற்கூட்டிய பிரதி ஒன்றரைப் பக்கங்களில் மாத்திரம் அமைந்துள்ளது.

அதில், 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வரவேற்புத் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, நாட்டின் மனித உரிமைகளை ஊக்குவிக்க ஐ.நாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் இந்த தீர்மான வரைவில் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பான இந்த தீர்மான வரைவு குறித்து விவாதிக்கும் முதல் முறைசாராக் கூட்டம்,  வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 07) ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கட்டடத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் இணை அனுசரணை நாடுகள், பேரவையின் உறுப்பு நாடுகள், அரசசார்பற்ற நிறுவனங்கள்,  மற்றும் ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகப் பிரதிநிதிகள், உள்ளிட்டவர்கள் பங்கேற்று தீர்மான வரைவு வாசகங்கள் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

அமெரிக்கா, பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்படும் இந்த தீர்மானத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் இணை அனுசரணை வழங்கவுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், சமர்ப்பிக்கப்படும் தீர்மானங்களின் வரைவுகளை இணை அனுசரணை நாடுகள் சமர்ப்பிப்பதற்கான இறுதிக் காலக்கெடு மார்ச் 16ஆம் நாள்  முடிகிறது.

 மார்ச் 23ஆம் நாள், இந்த தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நகலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சில விடயங்கள் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற பந்தியை நீக்குமாறு சிறிலங்கா கோரலாம். வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு இலங்கையின் அரசியல் யாப்பில் இடமில்லை என்றும் அரசியல் யாப்பை மாற்றுவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவே இப்போதைக்கு இது சாத்தியமில்லை என்ற காரணத்தை காட்டி இதை நீக்குமாறு சிறிலங்கா கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் நகல் வெளியான போது அதில் சிறிலங்காவின் கோரிக்கைக்கு அமைய சில பகுதிகள் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். UNO GENEVA

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thanabalasingam

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க எண்ணும் அணியுடன் கைகோர்த்திருக்கும் விக்னேஸ்வரன் – வி.தனபாலசிங்கம். [June 27, 2017]

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஒரு வருடம் கடந்துபோவதற்கு முன்னதாகவே தமிழ்த் ...
bikku

இரத்த தானம் என்ற பெயரில் தமிழர்களைக் கேவலப் படுத்தும் பேரினவாத அரசியல் – வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன். [June 27, 2017]

அண்மைக்காலமாக தமிழ் மக்கள் சாதீய பிரிவுகளினால் பிரிந்து இருப்பதன் காரணமாக ...
ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...