Wednesday, March 29th, 2017

போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு சென்ற இரு தமிழர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது

Published on March 10, 2017-9:06 am   ·   No Comments

airportபிரான்ஸ் நாட்டிலிருந்து போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு சென்ற மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த தந்தையும் மகளும் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.   குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கடந்த 25 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த அ .தியாகராஜா ( வயது 52) மற்றும் அவரது மகளான தியாகராசா ஜனனி (வயது 24 ) ஆகிய இருவருமே கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் வைத்திருந்த கடவுச்சீட்டு போலியானது என கண்டறிந்த விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் இவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.  இவர்கள் இவருவரையும் நீர்கொழும்பில் உள்ள குடிவரவு குடியகல்வு விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றில் பொலிஸார் நிறுத்தினர்.

இருவரையும் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் மற்றும் இரண்டு சரீர பிணையிலும் விடுவித்த நீதவான் இவர்களை அடுத்த மாதம் நீதிமன்றில் வழக்கு தவணைக்காக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இவர்கள் வைத்திருந்த போலிக்கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்த நீதிமன்றம் வழக்கு முடியும் வரை இலங்கையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் இவர்களின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்த பின் பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். airport

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...