Monday, May 22nd, 2017

மூன்று கோரிக்கைகளை ஐ.நா.வுக்கு அனுப்புவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு.

Published on March 11, 2017-2:27 pm   ·   No Comments

TNA 3வவுனியாவில் இன்று கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூன்று கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கும் அனுப்புவதென முடிவெடுத்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் வவுனியா இன் விடுதியில் இன்று காலை ஆரம்பமான கூட்டம் பிற்பகல் 4மணிவரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் மூன்று தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

1. 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

2. ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் நிறுவி அதன் ஊடாக ஐ.நா. தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறையை கண்காணிக்க வேண்டும்.

3. 30.1 இலக்க தீர்மானம் உரிய காலத்தில் நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறினால் ஐ.நா.சபை பொறிமுறை ஒன்றை நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும்.

இந்த மூன்று தீர்மானத்திற்கும் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகிய கட்சிகள் ஆதரவை வழங்கிய போதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் அதற்கு ஆதரவை வழங்க மாட்டோம் என தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்திற்கு தமது தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அழைக்கப்படவில்லை என சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சம்பந்தன் இக்கூட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தான் அழைக்கப்பட்டனர் என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா.வுக்கு மனு அனுப்பிய விவகாரம் தொடர்பாக ஆராயப்பட்ட போது கால அவகாசம் வழங்க வேண்டும் என ஐ.நாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த யாரும் மனு அனுப்பவில்லை என்றும் காலஅவகாசம் வழங்கப்பட்டால் கடும் நிபந்தனைகளுடன் தான் கால அவகாசம் வழங்க வேண்டும் என தான் தெரிவித்திருந்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழரசுகட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், யோகேஸ்வரன், சிறிதரன், சரவணபவன் சிவமோகன் மாகாணசபை உறுப்பினர்களான கி.துரைராசசிங்கம், தண்டாயுதபாணி, உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ரெலோவின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் ( ஜனா) சிவாஜிலிங்கம், புளொட் சார்பில் சித்தார்த்தன், லிங்கநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சிவசக்தி ஆனந்தன், ஆர்.துரைரத்தினம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.TNA 3TNA 2TNA 1TNA 4

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran 2

ஆயுதப்போராட்டம் காரணமாக கல்விமான்களை மதிக்காத நிலை தோன்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செவ்வி. VIDEO [May 22, 2017]

இப்போது என் மீது வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது எந்த ...
polanaruwa

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல். [April 16, 2017]

சிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது ...
selva

மட்டக்களப்பில் தந்தை செல்வா 40ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – சுமந்திரன் உரையாற்றுகிறார். [April 12, 2017]

தந்தை செல்வா என தமிழ் மக்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் ...
IMG_9656

சுவிட்சர்லாந்தில் ஊரி மாநில தமிழ் மக்களின் 25ஆவது ஆண்டு விழா [April 11, 2017]

சுவிட்சர்லாந்து ஊரி மாநிலத்தில் தமிழ் மக்கள் குடியேறி 25ஆண்டுகள் பூர்த்தியாவதை ...
army

இராணுவ கோப்ரல் மர்ம மரணம்-விசாரணை ஆரம்பம். [April 10, 2017]

இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் ...
Arulanantham

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் காலமானார். [April 9, 2017]

தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். ...
kirupakaran

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளன. [April 8, 2017]

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் ...
His_Master's_Voice

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.? – ராம். [April 7, 2017]

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக ...
kirupa

நெடுந்தீவு சிறுமி படுகொலை- ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபாவுக்கு மரணதண்டனை தீர்ப்பு [April 7, 2017]

நெடுந்தீவில் 12வயதுடைய சிறுமி லக்சாயினியை பாலியல் பாலத்காரம் செய்து படுகொலை ...
Netherlands Court

விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த 5பேருக்கு 20ஆண்டுகால சிறை- நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு . [April 5, 2017]

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ...