Saturday, June 24th, 2017

மக்களிடம் உண்மையை சொல்லாமல் இருப்பவன் மக்கள் பிரதிநிதியாக இருக்க முடியாது- சுமந்திரன். ( VIDEO Full)

Published on March 12, 2017-1:32 pm   ·   No Comments

TNA Batti 6அடுத்த தேர்தலில் வாக்குகளைப் பெற முடியாது என்பதற்காகவோ ,தங்களைத் துரோகிகள் என்று சொல்வதற்குப் பயந்தோ மக்களிடம் உண்மையைச் சொல்லாமல் இருப்பவன் உண்மையான மக்கள் பிரதிநிதியாகவோ மக்கள் சேவையாளனாகவோ இருக்கமுடியாது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ். நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று மட்டக்களப்பில் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு இன்று செங்கலடி சீனிப்போடியார் மண்டபத்தில் இடம்பெற்றது. அங்கு நினைவு பேருரை நிகழத்தும் போது சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. மாணிக்கவாசகத்தின் 41ஆவது மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ். சம்பந்தமூர்த்தியின் 28ஆவது நினைவு தின நிகழ்வு என்பன இன்று நடைபெற்றன. மாவட்ட சபை முன்னாள் தலைவர் சம்பந்தமூர்த்தியை விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைத்தீர்மானம் என்பது வெறுமனே குறுகிய காலத்தில முடிக்கப்படுகின்ற அல்லது உடனடியாக இணக்கப்படுகின்ற விடயம் அல்ல. 2010லே கனடா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தினை கொண்டு வர எத்தனித்த போது அத்தீர்மானம் அப்போது தோற்றுவிடும் என்ற காரணத்தினால் அது பின்வாங்கியது. பின்னர் உலக வல்லரசான அமெரிக்க அத்தீர்மானத்தினை கொண்டு வந்து மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் வெற்றி பெற்றது, இவ்வாறுதான் சில இடங்களில் நாம் இராஜதந்திர விட்டுக்கொடுப்புகளை செய்து இலக்கை அடைய வேண்டும். மாறாக இதற்கு அடுத்த வழி படிமுறைகளை மேற்கொள்ள 47 உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பு தேவை என அவர் தெரிவித்தார்.

தலைமையுரையாற்றிய தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் 1977 பொதுத் தேர்தலிலே கல்குடாத் தொகுதியில் வெறும் 555 வாக்குகளால் நாம் பெற்ற தோல்வியை தமிழீழக் கனவுக்கு கிழக்கு ஒத்துழைக்கவில்லை என மறைந்த முன்னாள் ஜே.ஆர். ஜெயவர்தனா பிரச்சாரம் செய்தார் என தெரிவித்தார்.

1965இல்தமிழ் அரசு கட்சியோடு நாடாளுமன்றம் சென்றிருந்த முஸ்லீம்கள் ஆளுங்கட்சியினரோடு சேர்ந்து கொண்டார்கள்.

இதன் விளைவாக தமிழ் பேசும் மக்களிடையே விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. முஸ்லிம் மக்கள் அரசோடு சேரந்து அரசியல் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாக எங்களுக்குப் பெரிய சவால் காத்திருந்தது.இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத் தொகுதியிலே 1965இல் போட்டியிட்ட மாணிக்கவாசகம் அவர்கள் தோல்வியை தழுவிக்கொண்டார்.

தமிழர்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கின்ற காலமாக 1977 இருந்தது. தமிழீழப் பிரகடனம் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு எங்கும் உணர்ச்சிக் கொந்தளிப்பு. இளைஞர்கள் பட்டாளமாக உணர்ச்சிப் பிரவாகத்தில் பங்கெடுத்த வேளை அது.

கல்குடாத் தொகுதியிலே நாம் கண்ட தோல்வியை தமிழீழக் கனவுக்கு கிழக்கு ஒத்துழைக்கவில்லை என்று மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா பிரச்சாரம் செய்யுமளவிற்கு தமிழர்கள் 1977 பொதுத் தேர்தலிலே கல்குடாத் தொகுதியில் தோல்வி கண்டோம்.

ஆனால் அது வெறும் 555 வாக்குகள்தான் தோல்வியை தமிழர்களுக்கு நிர்ணயித்தது இந்தத் தவறுக்காக நாம் இப்பொழுதும் வருந்த வேண்டியுள்ளது.

நாம் இப்பொழுதும் இக்கட்டான கால கட்டத்தில் இருக்கின்றோம் என்பதை நமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயாவும் கூறி வருகிறார். என்றார்.TNA Batti 6TNA Batti 3TNA Batti 4TNA Batti 5TNA Batti 7TNA Batti. 1TNA Batti. 2TNA Batti

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...