Wednesday, March 29th, 2017

சாரதி அனுமதி பத்திரம் கேட்ட கான்ஸ்டபிளை காரினால் மோதி ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை இழுத்துச் சென்ற பெண் : கொழும்பில் சம்பவம் .

Published on March 14, 2017-6:25 pm   ·   No Comments

Prostituteபாதை விதிமுறைகளை மீறிய கார் ஒன்றினை நிறுத்தி அதன் சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரத்தை கேட்ட கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிளை அதே காரினால் மோதி காயப்படுத்தி, காரின் பொனட் மீது விழுந்த அவரை அதில் இருக்கத்தக்கதாகவே சுமார் ஒரு கிலோமீற்றர் வரை காரைச் செலுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நடமாடும் விபசார விடுதியொன்றினை நடத்திவரும் பெண் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் ஜயராம் டொஸ்கி உத்தரவிட்டுள்ளார். தெற்கு களுத்துறையைச் சேர்ந்த கீதா சியாமலீ எனும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 கடந்த 10 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரகரி வீதியில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள்களான  உபுல், பிரதீப் ஆகியோர் போக்கு வரத்து கடமையில் இருந்துள்ளனர். இதன் போது டப்ளியூ.பி.சி.ஏ.எச். 9280 எனும் காரினை பொலிஸார் நிருத்தியுள்ளனர். அதில் 5 பெண்கள் இருந்துள்ளனர். காரினை கீதா எனும் தற்போது கைதகியுள்ள பெண்ணே செலுத்தியுள்ள நிலையில், அவரின் சாரதி அனுமதி பத்திரத்தை பொலிஸார் கோரியுள்ளனர்.

இதன் போது காரினை இயக்கிய குறித்த பெண் அந்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது மோதியுள்ளார். கார் மோதியதினால் காரின் பொனட் மீது அந்த கான்ச்டபிள் விழவே தொடர்ந்து அக்காரை அப்பெண் முன்னோக்கி வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதன் போது காரின் பொனட்டில் காயத்துடன் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் காரின் இரு பக்கங்களை பிடித்தவாறு உயிரை காப்பாற்றிக்கொள்ள போராடியுள்ளார். இதன் போது அவ்வீதியால் வேன் ஒன்றில் வந்துள்ள கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த  மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் மன்சான் எனும் நபர், பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏதோ ஆபத்து என கருதி காரின் குறுக்காக வேனை நிறுத்தி பொலிஸ் கான்ஸ்டபிள் உபுலை காப்பாற்றியுள்ளார்.

இதன் போது காரில் இருந்த நான்கு பெண்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளதுடன் காரைச் செலுத்திய பெண் தடுக்கி விழவே அவரை பொலிஸார் கைதுச் செய்துள்ளனர். காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

 இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணையில், கைதான பெண் ஒரு நடமாடும் விபசார விடுதியை வாடகைக்கு எடுக்கும் வாகனங்கலில் நடத்துபவர் எனவும், அது தொடர்பிலேயே பணத்துக்கு பெண்கள் சிலரை ஆடவருக்கு விற்பனைச் செய்ய செல்லும் வழியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மேலதிகமாக, சம்பவம் இடம்பெறும் போது காரில் ஒருந்த விபசாரிகள் என நம்பப்படும் ஏனைய பெண்களைத் தேடியும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Prostitute

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...