Tuesday, February 20th, 2018

தொலைபேசிகளை ஓட்டுக்கேட்ட பிரபல வாரப்பத்திரிகை!

Published on July 8, 2011-8:10 pm   ·   No Comments

பிரிட்டனின் மிகப் பெரிய வாரப் பத்திரிகையான, நியூஸ் ஒப் த வோர்ல்ட் , அரசியல்வாதிகள், பிரபலமானவர்கள் மற்றும் பொதுமக்களின் தொலைபேசிச் செய்திகளை ஒட்டுக்கேட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து மூடப்படுவதாக அந்தப் பத்திரிகையை நடத்தும் நியூஸ் இண்டர்னேஷனல் நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் முர்டாக் நேற்று வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.
இப் பத்திரிகை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முன்னாள் ஆசிரியராக இருந்தவரும், சில மாதங்கள் முன்பு வரை , பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரனின் மக்கள் தொடர்புத் துறை இயக்குநராக இருந்து பின்னர் பதவி விலகியவருமான, ஆண்டி கூல்சன் இன்று வெள்ளிக்கிழமை, இந்த தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
168 ஆண்டுகளாக பிரிட்டனில் ஞாயிற்றுக்கிழமை இதழாக வெளிவரும், இந்தப் பத்திரிகை, பரபரப்பூட்டும், புலனாய்வுச் செய்திகளையும், பொதுப் பிரச்சினைகள் குறித்த பிரச்சார ரீதியிலான செய்தி இயக்கங்களையும் நடத்திப் பிரபலமானது.
சர்வதேச அளவில் ஊடகச் சக்ரவர்த்தி என்ற அளவில் பெயர்பெற்றுள்ள , ஆஸ்திரேலியாவில் பிறந்த , ருபர்ட் முர்டாகின் நியூஸ் கார்ப் நிறுவனத்தின் கிளை நிறுவனம் தான் இந்த பிரிட்டனில் இயங்கும் நியூஸ் இண்டர்னேஷனல்.
இந்த குழுமத்திலிருந்து , லண்டனின் டைம்ஸ் நாளிதழ், சன் பத்திரிகை, மற்றும் ஸ்கை தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
நியூஸ் ஒப் த வோர்ல்ட் இதழின் முன்னாள் ஆசிரியர் ஆண்டி கூல்சன் , தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் மற்றும் போலிசாருக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான விசாரணைகளிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன், இதில் பல காலமாக அலட்சியப்படுத்தப்பட்டுவந்த ஒரு பரந்து பட்ட பிரச்சினை இருப்பதைத் தான் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
தான் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது என்பதை புரிந்து கொண்டது மட்டுமல்லாமல், அது குறித்து இரண்டு விசாரணைகளை அறிவிப்பதன் மூலம், தான் நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் கேமரன் கூறினார்.

ஆனால், ஆண்டி கூல்சனை தனது மக்கள் தொடர்பு இயக்குநராக நியமிக்க எடுத்த முடிவுக்கு வருத்தம் தெரிவிப்பதைத் தவிர்த்தார் கமரன்.
அவரை நியமிப்பதற்கு முன்னர், அவரிடம் இந்த சம்பவங்கள் குறித்து உறுதிமொழிகளைத் தான் கோரியதாக மட்டும் அவர் கூறினார்.
ருபர்ட் முர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யத்துடன் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களும் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாலும், இந்த விவகாரத்தில் ஒரு நல்ல சந்தர்ப்பம் தனக்கு வாய்த்திருப்பதாகவே தற்போதைய எதிர்க்கட்சியான,தொழிற்கட்சியின் தலைவர் எட் மிலிபாண்ட் நினைக்கிறார்.
இந்த விவகாரத்தை பிரதமர் சரியாகப் புரிந்துகொள்ளவேயில்லை என்று கூறும் மிலிபாண்ட் இந்த விவகாரத்தின் விளைவாக ஒரு பெரும் மாற்றம் விளைந்திருக்கிறது என்கிறார்.
பிரபலங்கள் மட்டுமல்லாமல், மிகவும் வருத்தத்திலிருந்த , மிகவும் பலவீனமான நிலையில் இருந்த சாதாரண பொதுமக்களின் தொலைபேசிகளும் ஒட்டுக்கேட்கப்பட்டன என்ற உண்மை தெரிய வந்த கடந்த வாரத்தில்,இந்த விவகாரத்தில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்பட்டன . ஆனால் இந்த கதை இன்னும் முடிந்துவிடவில்லை.
பொலிஸ் விசாரணைகள் மிகவும் உச்சகட்டத்தில் இருப்பதையே இந்த சமீபத்திய கைதுகள் காட்டுகின்றன. நீண்ட இரண்டு விசாரணைகள் நடக்க இருக்கின்றன. முர்டோக்கின் ஊடக சாம்ராஜ்யத்தின் எதிர்காலம் குறித்து ஏராளமான விவாதம் நடக்க இருக்கிறது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...