Sunday, September 24th, 2017

“வால் ஸ்ட்ரீட்’ போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒருமாதம் நிறைவு

Published on October 18, 2011-10:59 am   ·   No Comments

அமெரிக்காவின் “வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம் ஆரம்பமாகி நேற்றோடு ஒரு மாதம் நிறைவாகியுள்ளது. போராட்டத்திற்கான நிதியுதவி தற்போது மூன்று லட்சம் டாலராக அதிகரித்துள்ளது. இந்நிலையில், லண்டனில் “லண்டன் ஆக்கிரமிப்பு’ போராட்டம் மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த செப்டம்பர் 17ம் தேதி மன்ஹாட்டன் பகுதியில், வால் ஸ்ட்ரீட் என்ற இடத்தில் நடந்த, 1,000 பேர் மட்டும் பங்கேற்ற சிறு போராட்டம், இன்று உலகளவில் தீப்பிடித்தது போல பரவி வருகிறது.

வால் ஸ்ட்ரீட் போராட்டம் நேற்றுடன் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கான நிதியுதவி மற்றும் பொருளுதவிகள் குவிந்து கொண்டே வருகின்றன. இதுவரை “ஆக்குபை வால் ஸ்ட்ரீட்’ அமைப்பிற்கு மூன்று லட்சம் டாலர் நிதியுதவி வந்துள்ளது. இந்தப் பணம் அனைத்தும், அமெரிக்காவின் மிகப் பழமையான வங்கியான “அமல்கமேட்டட் வங்கியில்’ போடப்பட்டுள்ளது. இந்த வங்கி, அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பால் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் தற்போது நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கான உணவு, படுக்கைகள், மருந்துப் பெட்டிகள், தண்ணீர் பாட்டில்கள், உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும், தினசரி பெட்டி பெட்டியாக வந்து குவிகின்றன.

இந்தப் பொருட்கள் அனைத்தையும் வைப்பதற்கு வசதியாக, பூங்கா அருகில் உள்ள ஐக்கிய ஆசிரியர்கள் சங்கம் என்ற அமைப்பு, தங்கள் கட்டடத்தின் கீழ் தளத்தை அளித்துள்ளது. இந்தப் பொருட்கள் அனைத்தும், போராட்டம் நீண்ட நாட்கள் நடப்பதற்கு உதவும் என, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வாஷிங்டனில் நடந்த மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் பராக் ஒபாமா பேசுகையில், “இன்று மார்ட்டின் லூதர் கிங் இருந்திருப்பாரானால், வால் ஸ்ட்ரீட்டின் செயல்பாடுகளுக்கு குந்தகம் நேராமல், வேலையில்லாதோர் அதன் வரம்பு மீறல் போக்கை எதிர்கொள்ள வேண்டும் என கூறியிருப்பார்’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள புனித பால் கதீட்ரல் முன்பு நேற்று மூன்றாவது நாளாக “லண்டன் ஆக்கிரமிப்பு’ இயக்கத்தினர் தங்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தனர்.

கடந்த 15ம் தேதி இதே இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்குப் பின், 200க்கும் அதிகமானோர் அங்கு கூடாரங்கள் அமைத்து தங்கிவிட்டனர். அவர்களின் ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் நடப்பதாலும், கதீட்ரலின் அன்றாட நடவடிக்கைகளுக்கு அவர்கள் இடையூறு செய்யாததாலும், கதீட்ரல் நிர்வாகம் இதை அனுமதித்துள்ளது.

 

 

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...