Sunday, November 19th, 2017

கடாபி சுட்டுக்கொல்லப்பட்டார்- லிபிய இடைக்கால அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!

Published on October 20, 2011-2:28 pm   ·   No Comments

லிபிய முன்னாள் அதிபர் கடாபி புரட்சிப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார் என லிபிய இடைக்கால தலைமை அமைச்சர் முகமுட் ஜிப்ரி இன்று மாலை லிபிய தலைநகர் திரிபோலியில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
கடாபி லிபிய புரட்சிப் படையிடம் சிக்கி கால்களில் காயமடைந்த நிலையில் தப்பிசெல்ல முடியாது பிடிபட்டுள்ளார் என செய்திகள் வெளிவந்த போதிலும் அவர் இறந்து விட்டதாக லிபிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
அவரின் இறந்த உடலை அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அவர் இறந்த செய்தி கேட்டு லிபியாவின் நகரங்கள் பலவற்றில் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும், துனிசியாவில் அகதிகளாக இருக்கும் லிபிய மக்கள் அங்குள்ள லிபிய தூதரகத்திற்கு முன்னால் மகிழ்ச்சி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பனாம் பயணிகள் விமானத்தாக்குதல் உட்பட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட கடாபி இறந்த இன்றைய நாள் முக்கிய நாளாகும் என பிரித்தானிய தலைமை அமைச்சர் டேவிட் கமரோன் தெரிவித்துள்ளார்.
கடாபி 1969ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து 42 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி புரிந்துள்ளார்.இந் நிலையில் கடந்த ஒகஸ்ட் மாதம் 23ம் திகதி கடாபி பதவியில் இருந்து கவிழ்க்கப்பட்டார். நேட்டோ படைகளின் உதவியுடன் லிபிய தலைநகர் திரிபோலியை லிபிய புரட்சி படையினர் கைப்பற்றியதை தொடர்ந்து கடாபி தலைமறைவானார். 
இந்நிலையில் சிர்டேவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கடாபி சுட்டுக் கொல்லப்பட்டதாக லிபிய இடைக்கால அரசு அறிவித்துள்ளது. அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=KJQUShElCzE&skipcontrinter=1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...