Tuesday, September 19th, 2017

கடாபியின் கடைசி நிமிடங்கள். ஆத்திரத்திலிருந்து ஏமாற்றமாக மாறிய கடாபியின் கடைசி காலம்!

Published on October 26, 2011-9:37 am   ·   No Comments

மும்மர் கடாபி, அவரின் மகன் முட்டாசிம் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரகசிய இடம் ஒன்றில் புதைக்கப்பட்டன. ஒரு பதுங்கு குழியிலிருந்து இன்னொரு பதுங்கு குழிக்கு தப்பி ஓடுகையில் மும்மர் கடாபி எவ்வாறு பிடிபட்டார் என்பதை மன்சூர் டார் என்று கடாபியின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் தெரிவித்தார்.

‘கைவிடப்பட்ட வீடு ஒன்றில் கடாபி தனது மகனுடன் மற்றும் ஆதரவாளர்கள் சிலருடனும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தொலைபேசி, தொலைக்காட்சி,  மின்சாரம் இன்றி நிலத்தில் குந்தியிருந்து  காலத்தை கடத்தி வந்தனர். வெளி உலகிலிருந்தது அந்த வீடு துண்டிக்கப்பட்டிருந்தது. கடாபியின் மனநிலை ஆத்திரத்திலிருந்து ஏமாற்றமாக மாறியிருந்தது. இறுதி நாட்களில் தான் தோற்றுப்போய்விட்டேன், ஏமாற்றமடைந்து விட்டேன் என்ற மனநிலையிலேயே இருந்தார் என கடாபியின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி அடுப்பில் தேநீர் சுட வைத்து பாவிப்பது, குறிப்புகளை எழுதிக்கொள்வது ஆகியவற்றையே முன்னாள் சர்வாதிகாரியான மும்மார் கடாபி இறுதிக்காலத்தில் மேற்கொண்டு வந்தார். அவர் யுத்தத்தை நடத்தவில்லை. அவரின் பிள்ளைகள் தான் எல்லாவற்றையும் செய்தனர். கடாபி செய்யவில்லை’ என்று அந்த முன்னாள் மெய்ப்பாதுகாவலர் தெரிவித்தார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...