Wednesday, January 17th, 2018

கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு!

Published on October 27, 2011-1:48 pm   ·   No Comments

போரில் கடாபி கொல்லப்பட்டது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக கடாபியின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். கடாபி குடும்பத்தினர் சார்பில் அவர்களது சட்டத்தரணி பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பார்ஸ்டன் இதனைத்தெரிவித்துள்ளார்.
லிபியாவில் புரட்சிப் படையினர் நாடு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். லிபிய அதிபர் கடாபி மற்றும் அவரது மகன் ஆகியோர் அவரது சொந்த ஊரான சிர்த் நகரில் கொல்லப்பட்டனர். கடாபி குடும்பத்தினர் பலர் தற்போது நாட்டை விட்டு தப்பி சென்று வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
லிபியாவில் புரட்சிப் படையினர் ஆரம்பத்தில் இருந்தே போர் குற்றங்களை புரிந்து வந்துள்ளனர். போர்க்குற்றறத்தை மீறி எராளமான ராணுவ வீரர்களையும் அப்பாவிகளையும் கொன்று குவித்துள்ளனர். கடாபி மற்றும் அவரது மகன் கொல்லப்பட்டதும் போர் குற்றங்களாகும். எனவே இதுதொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறோம் என கடாபின் குடும்பத்தின் சார்பில் அவர்களது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசுக்கு லிபியாவை ஆளுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்கள் ஆட்சியை கடாபியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடாபி குடும்ப சட்டத்தரணி தெரிவித்தார்.
இதற்கிடையே நகர பகுதிகளில் இருந்து தப்பி சென்ற கடாபி ஆதரவு ராணுவத்தினர் லிபியாவின் தெற்கு பாலைவன பகுதியில் பதுங்கி உள்ளனர். எனவே அவர்களை வேட்டையாட புரட்சிப்படையினர் அந்த பகுதியை நோக்கி சென்றுள்ளனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...