Monday, September 25th, 2017

கார்த்திகை பூக்களே நலமா?(Att; Audio) தமிழ்ப்பொடியன்

Published on November 27, 2015-12:00 pm   ·   8 Comments

ஒலிவடிவை கேட்க  Kavithai-Ramanan

கார்த்திகை பூக்களே நலமா?

கல்லறை தெய்வங்களே சுகமா?

எங்கள் ஊர்கள் நலமா?அங்கே உறவுகள் நலமா?

நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?

தூயவர்களே  நீங்கள் துயின்ற துயிலும் இல்லங்கள் இல்லையே…!!!

எங்கே போனீர்கள்?

எங்கள் மனங்களில் நிம்மதி இல்லையே…!!!

அட யார் அழுவது அங்கே?…..

எங்கள் பிள்ளைகள் கண்மூடி துயின்றது தாய்மண்ணின் மடியில்

அவர்கள் எப்போதும் வாழ்வது எங்களின் இதயங்களின் அடியில்…..!!!

கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை

எங்கள் கண்மணிகளின்  நினைவிருக்கும்.

அவர்களின் கனவும் இருக்கும்.

 

கார்த்திகை பூக்களே நலமா?

கல்லறை தெய்வங்களே சுகமா?

எங்கள் ஊர்கள் நலமா?அங்கே உறவுகள் நலமா?

நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?

விதையாய் விதைத்தோம்

விருச்சங்களே  நீங்கள் முழைப்பது எப்போது?

கல்லறைகள் ஒவ்வொன்றும் உள்ளே கனன்றெரியும் தீக்கிடங்குகள்

தொட்டவனை சுட்டெரிக்கும் வேளை வரும்.

எரிமலைகள் வெளியே எரிவதும் இல்லை தெரிவதுமில்லை.

கல்லறை வந்து கட்டியணைத்து- எங்களின்

கவலைகள் சொல்லதுடிக்குது மனது

வீர வேங்கைகளே உங்களின் விழி திறக்காதா ?

விரைவில் எங்களுக்கு வழி பிறக்காதா?

மாவீரர்களே எங்களின் மனம் கனக்குதே..!!!

மறுபடியும் ஒரு  நாள் உயிர்வலிக்குதே..!!!

 

கார்த்திகை பூக்களே நலமா?

கல்லறை தெய்வங்களே சுகமா?

எங்கள் ஊர்கள் நலமா?அங்கே உறவுகள் நலமா?

நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?

மணியோசை கேட்டால் மனம் உருகும்

துயிலும் இல்லத்தில் எங்களின் உயிர் கருகும்.

விளக்குகள் எரிக்கையில் எங்களின் விழி கலங்கும்

விரைவினில் விடியும் என்றே அது சொல்லி எரியும்.

விழி நீர் ஊற்றி விதைக்கும் போது விம்மி வெடிக்கும் மனது

அந்தக்கணம் எழுத்தில் சொல்ல முடியாத உணர்வு.

வார்த்தைகளால் சொல்ல முடியாத உங்களின் தியாகங்கள்

யாரும் செய்யவே முடியாத உங்களின் யாகங்கள்….!!!

தியாக தீபங்கள் அணைகையில் அடி வயிறு எரியும்

அருகில் இருந்த உங்களுக்கு மட்டும் தான்

அது தெரியும்.

அத்தனை நாளும் தூங்காத உங்கள் விழிகள்…!!

மணியோசை கேட்ட பின்னே அமைதியாய் கண் துயிலும்.

மண்ணில் விடுதலை தீ மூண்டெரியும்

அதில்  நிதம் நிதம் உம் நினைவும் சேர்ந்தெரியும்.

கற்பனையே செய்ய முடியாத அற்புதங்கள்

யாரும் செதுக்க முடியாத சிற்பங்கள்.

கல்லறையில் துயிலும் அக்கினிக்குஞ்சுகள்

கருக்கொண்டு கிடக்கும் தமிழீழத்தின் பிஞ்சுகள்.

 

கார்த்திகை பூக்களே நலமா?

கல்லறை தெய்வங்களே சுகமா?

எங்கள் ஊர்கள் நலமா?

உறவுகள் நலமா?

நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?

வெள்ளை மணல் வெளியில் உங்களின் கால்த்தடம் தெரியும்

விரைவினில் விடிவு வரும் என்று சொல்லியே அது சிரிக்கும்.

கடற்கரைக்காற்றினில் கந்தக வாசம் வரும்

கரும்புலிகளின் நினைவுகளும் அதில் சேர்ந்து வரும்.

தூரத்தில் தெரியும் வானம் சிவக்கும்- அதில்

சிந்திய உங்களின் குருதி இருக்கும்.

வானத்தில் இருந்து வந்து விழும் மழைத்துளியில்- நீங்கள்

சிந்திய வியர்வையின் உப்புக்கரிக்கும்.

பூத்துக்குலுங்கும் கார்த்திகைப்பூக்களில் உங்களின்

புன்னகையும் பூத்திருக்கும்.

மூண்டெரியும் தீபச்சுடரிலே உங்களின்

செம்முகமும் சேர்ந்தெரியும்.

தாயக நினைவுகள் ஆயிரம் வந்தாலும் அட

சத்தியமாய் அத்தனையிலும் நீங்கள் இருப்பீர்கள்.

விடுதலைத்தாயின் செல்லப்பிள்ளைகள்-எங்கள்

வீட்டு முற்றத்தில் வளர்ந்த முல்லைகள்

 

கார்த்திகை பூக்களே நலமா?

கல்லறை தெய்வங்களே சுகமா?

எங்கள் ஊர்கள் நலமா?

உறவுகள் நலமா?

நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?

காற்றோடு கலந்தாலும்

கடலோடு கரைந்தாலும்

மண்ணோடு புதைந்தாலும்

மாவீரன் சாவதுமில்லை.

மாவீரம் அழிவதுமில்லை.

விடிகின்ற வேளையில் உங்களுக்கு விளக்கெரிப்போம்

எல்லாம் முடிகின்ற போதிலே மீண்டும் உம்மை விதைத்திடுவோம்.

எதுவரினும் உங்களை மறந்திட மாட்டோம்

நீங்கள் நடந்திட்ட பாதையை விட்டு விலத்திட மாட்டோம்.

உறுதியின் உறைவிடங்களே…!!

வீரத்தின் விளை நிலங்களே..!!!

உயிர் தந்த உங்கள் மீது உறுதி…

விரைவினில் விடியும் இரவு…!!!

அன்று வருவோம் உங்களின் காலடியில்

‘தீபம் ஏற்றி கண்ணீர் விடுவோம்.

 

கார்த்திகை பூக்களே நலமா?

கல்லறை தெய்வங்களே சுகமா?

எங்கள் ஊர்கள் நலமா?

உறவுகள் நலமா?

நீங்கள் துயிலும் தாய்மடி நலமா?

தமிழ்ப்பொடியன்

ஒலிவடிவை கேட்க Kavithai-Ramanan

Readers Comments (8)

  1. Sutharsan sivarasa says:

    Its really nice….loved it very much…

  2. நெஞ்சை உருக்கும் கவிதை… கார்த்திகை பூக்களும் கல்லறை தெய்வங்களும் எங்கள் இதயங்களில் வாழும்

  3. Sammy says:

    நெஞ்சை உருக்கும் கவிதை… கார்த்திகை பூக்களும் கல்லறை தெய்வங்களும் எங்கள் இதயங்களில் வாழும்
    +1

  4. தமிழ்ப்பொடியன் says:

    எல்லோருக்கும் நன்றிகள்.
    கனக்கும் இதயங்களின் வலிகளை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை.
    இருந்தும் கவிதையால் எங்கள் கண்மணிகளுக்கு ஒரு வேள்வி செய்கிறேன்.விரைவினில் விடியாதா?

  5. puthiyavan says:

    உங்கள் கவிதை எங்கள் ஈழ இணையத்தில் ……http://www.eelamwebsite.com/?p=18249
    ..நன்றி புதியவன்

  6. aavuraan says:

    தமிழ் பொடியனின் கவிதை மிகவும்
    நன்றாக இருக்கிறது.தொடர்க உங்கள் பணி
    நன்றி
    ஆவூரான்.

    கார்த்திகைத் திருநாள்

    மொட்டு விட்ட கார்த்திகையும்
    பூக்கவில்லையே-கவிதை
    மெட்டெடுத்துப் பாடுதற்கும்
    புதுவை இல்லையே –நாம்
    கட்டி வைத்த கல்லறைகள்
    காணவில்லையே-எம்
    கண்மணிக்குப் பூசை செய்ய
    ஆணையில்லையே

    வெந்தணலில் நானிருந்து
    நொந்து சாகிறேன்-எம்
    வேங்கைகளை விதைத்த மண்ணில்
    தேடிப் பார்க்கிறேன்.
    துயிலுமில்லம் இருந்த இடம்
    தூர்ந்து போனதோ-என்
    துக்கமது தொண்டையிலே காயந்து போனதோ.

    வன்னி நிலம் குனிந்த தலை நிமிரவில்லையே
    வந்த படை இங்கிருந்து விலகவில்லையே
    மாவீரர் உரையின்னும் நிகழவில்லையே
    மாதவனே… நீ போன இடம் தெரியவில்லையே..!
    + + + + +
    இருபத்தி ஏழாம் இரவினிலே
    இருள் கூட மெளனிக்கும் வேளையிலே
    மேகங்கள் பனி தூவும் அதிகாலையிலே
    வானிருந்து தும்பி வரும்
    வாசலிலே பூ உதிரும்
    கோவில் மணி ஓசை கேட்டதிரும்
    கொட்டி(யா)யதோ விசமென்று எதிரி
    கொக்கரித்து ஊர் திரியும்
    துயிலும் என் பிள்ளை ஆவி வரும்
    தூக்கி மடிவைத்து தூபமிட
    கண்ணீரால் பல கதைகள் கோலமிட
    கரிகாலன் சொன்ன கதை காதில் ஓத
    கர்வமுடன் என் தலையும் நிமிர்ந்து கொள்ள
    காலம் வரும் வரையில் உயிர் காவும்-மீண்டும்
    கார்த்திகைத் திருநாளுக்காய்.

    கவிஞர்.ஆவூரான். மெல்பேர்ண்.

  7. kavitha says:

    மாவீர செல்வங்களை நெஞ்சில் நிறுத்திச்சென்ற கவிதை, உணர்வுபூர்வமாக தந்த கவிஞருக்கு நன்றிகள்

  8. S.Abiramy says:

    விழிநீர் சுமந்திருக்கும் மக்களின் கண்ணீர் என்றும் வற்றாது. நெஞ்சை உருக்கும் கவிதை இதயத்தையே உலுப்புகின்றது…மாவீரர்களின் கனவுகள் நனவாகும் அவர்களது தியாகங்கள் என்றும் பொய்க்காது.

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...