Monday, November 20th, 2017

கள்ளத் தொடர்பு கையும் மெய்யுமாக பிடிபட்டது. 12வது மனைவியை விரட்டிய மன்னர்!

Published on November 25, 2011-7:35 pm   ·   No Comments

ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் மெஸ்வதியின் 12வது மனைவி நீதித்துறை அமைச்சருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததையடுத்து அவர் அரண்மனையில் இருந்து விரட்டப்பட்டார். ஆப்பிரிக்க நாடான சுவாசிலாந்தில் மன்னராட்சி நடந்து வருகிறது. அந்நாட்டை மூன்றாம் மெஸ்வதி (43) ஆண்டு வருகிறார். அவருக்கு 13 மனைவிகள், 23 குழந்தைகள். அதில் 12வது மனைவி இன்கோசிகடி லாதுபே (23). 

இன்கோசிகடி தனது 16வது வயதில் மன்னரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், அவருக்கும் நீதித்துறை அமைச்சருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் ம்மாபனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் உல்லாசமாக இருந்தபோது கையும், களவுமாக சிக்கினர்.

அதில் இருந்து லாதுபே வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவரது 3 குழந்தைகளையும் பறித்துக் கொண்டு மன்னர் அவரை அரண்மனையில் இருந்து வெளியேற்றிவிட்டார். 

இது குறித்து லாதுபே கூறியதாவது, 

ம்பாபனேவில் உள்ள ஒரு ஹோட்டலில் நானும், நீதித் துறை அமைச்சரான மம்பாவும் உல்லாசமாக இருக்கும்போது மன்னரிடம் பிடிபட்டோம். இதையடுத்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக நான் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டேன். 

கடந்த 12ம் தேதி திடீர் என்று என்னை அரண்மனையை விட்டு வெளியேறுமாறு உத்தரவு வந்தது. இதற்கிடையே எனது மூன்றாவது மகனுக்குக விளையாடும்போது அடிபட்டு ரத்தம் வந்தது. அவனை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முயன்றேன்.

ஆனால் பாதுகாவலர் என்னை குழந்தையுடன் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. என்னைத் தாக்குவேன் என்றும் மிரட்டினார். என்னை காப்பாற்றிக் கொள்வதற்காக அவரது கண்ணில் மிளகு பொடியைத் தூவினேன். 

இந்த விவகாரம் ராஜமாதாவின் காதுகளுக்கு எட்டியது. அவர் என்னை அரண்மனையை விட்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டார் என்றார்.

ஆனால் லாதுபேயை அரண்மனையை விட்டு வெளியேற்றவில்லை என்று அரண்மனை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...