Sunday, September 24th, 2017

ஈரான் தூதரக அதிகாரிகள் பிரித்தானியாவை விட்டு 48மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவு!

Published on November 30, 2011-5:23 pm   ·   No Comments

லண்டனில் உள்ள ஈரான் தூதரக அதிகாரிகள் அனைவரையும் 48மணி நேரத்தில் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வில்லியம் ஹக் உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து தெஹ்ரானில் உள்ள பிரித்தானிய தூதரகத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களையும் திரும்பப் பெற்றுகொள்வது என்று பிரித்தானியா தீர்மானித்ததையடுத்து அனைத்து பணியாளர்களும் தெஹ்ரானிலிருந்து துபாய் நாட்டுக்கு விமான மூலம் புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் 48மணி நேரத்தில் ஈரான் தூதரக அதிகாரிகள் பிரித்தானியாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஈரான் நாட்டுக்கு பிரித்தானியாவின் தலைமை அமைச்சர் டேவிட் கமரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரனில் உள்ள பிரத்தானிய தூதரகத்தை ஆர்ப்பாட்டக்கார்கள் தாக்கியதை அடுத்து பிரித்தானியா இவ்வெச்சரிக்கையை விடுத்துள்ளது.

அத்தாக்குதலில் அவலுவலகங்களில் இருந்த உடமைகள் அழிக்கப்பட்டன. கொடிகள் எரிக்கப்பட்டன. அணுசக்தித்திட்டங்கள் தொடர்பாக ஈரான் மீது பொருளாதாரத்தடைகள் விதிக்கப்பட்டதை எதிர்த்தே இவ்வார்ப்பட்டங்களும்
தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தலைமை அமச்சர் டேவிட் கமரன் பிரித்தானியா தூதரகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆத்திரமூட்டுவதாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். தாக்குதலின்போது பிரித்தானிய தூதரகத்திலிருந்த அலுவலர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்க ஈரான் தவறியது வெட்கக் கேடானது என்று பிரித்தானிய தலைமை அமைச்சர் தெரிவித்தார்.

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஒஸ்ரேலியாவும் அத்தாக்குதல் சம்பவத்தை கண்டித்துள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சகம் அத்தாக்குதல் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ளது. மேலும் பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டதை அடுத்து ஈரான் நாட்டுடனான ராஜதந்திர தொடர்புகளைக் குறைப்பதென ஈரான் பாராளுமன்றம் தீர்மானித்துள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...