Thursday, January 18th, 2018

50வருடகாலத்தின் பின் பர்மாவிற்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க இராஜதந்திரி!

Published on November 30, 2011-5:32 pm   ·   No Comments

அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் ஹிலாறி கிளிங்டன் பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார். 50 வருட காலத்தில் பர்மாவிற்கு விஜயம் செய்துள்ள முதலாவது சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரி என்ற பெருமை அவருக்கு
கிடைத்துள்ளது..

பர்மாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தம் விரிவான மாற்றம் ஒன்றுக்கு வழிவகுக்கும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார். நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சுயி கி, பர்மா அதிபர் தீன் சென் ஆகியோரை ஹிலாறி கிளிங்டன் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது. 1962 ஆம் ஆண்டு ராணுவம் பர்மாவின் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் சிரேஷ்ட அமெரிக்க அரசியல்வாதி எவரும் பர்மாவிற்கு விஜயம் செய்யவில்லை .

அதன் பின்னர் பர்மா உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலிருந்து வந்தது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ராணுவ ஆதரவு பெற்ற  அரசாங்கத்திற்கு ஆட்சி கைமாற்றப்பட்டது. முன்னாள் ராணுவ ஜெனரலான தற்போதைய அதிபர் சில சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். நேய் பியி டோவ் என்ற இடத்தில் வந்திறங்கிய ஹிலாறி கிளிங்டன் நாளை வியாழக்கிழமை உயர் அரசு அதிகாரிகளை சந்திப்பார் என்றும் பின்னர் ரங்கூன் சென்று ஜனாநாயகத்தலைவி ஆங் சான் சுயி கியிவை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பர்மா அரசாங்கம் மாற்றத்திற்கு தன்னை அர்ப்பணித்துள்ளதா என்பதை தான் நேரில் பார்க்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...