Wednesday, January 17th, 2018

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் பாகம் 1 – இரா.துரைரத்தினம்

Published on January 2, 2012-12:45 pm   ·   12 Comments

நடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பது என்பது சுகமான அனுபவமாக இருக்கலாம். ஆனால் அந்த பாதையில் சந்தித்த துன்பங்கள், வேதனைகள், இழப்புக்களை மீட்டுவது வேதனையும் கூட. ஏனெனில் பெரும்பாலான ஊடகவியலாளர்களின் வாழ்க்கை பயணம் என்பது இன்பங்கள் நிறைந்தது அல்ல.

இந்த ஊடகத்துறை மீது எனக்கு பல சந்தர்ப்பங்களில் வேதனையும் வெறுப்பும் ஏற்பட்டதுண்டு.

இந்த வேலையை விட்டுவிடு, இது ஆபத்து என என் அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. நான் செத்தாலும் கொள்ளி வைக்க நீ வேணுமடா என்று சொல்லுவா, அம்மா இறந்த போது அவவை கடைசியாக பார்த்து கடமை செய்ய முடியாத நிலைக்கு வந்து விட்டேனே என வேதனைப்பட்ட போது இந்த ஊடகத்துறை மீதும் வெறுப்பும் வேதனையும் ஏற்பட்டதுண்டு. 

நான் யாழ்ப்பாணம் முரசொலி பத்திரிகையில் பணியாற்றிய போது அந்த பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் திருச்செல்வம். அவர் ஒருநாள் கூறிய விடயம் இன்றும் என்னால் மறக்க முடியாமல் இருக்கிறது. இந்த தொழிலை விட்டிட்டு வேறு ஏதாவது அரசாங்க தொழில் ஒன்றை தேட சொல்லி அம்மா நெருக்கி வருகிறா என அவரிடம் நான் சொன்ன போது திருச்செல்வம் ஒன்றை சொன்னார்.

பத்திரிகை தொழிலுக்கு வந்தவனாலையும், விபச்சாரத்தொழிலுக்கு வந்தவளாலையும், தங்களுடைய தொழிலை விட ஏலாது. இரண்டு பேரும் தங்கட தொழிலிலை சலித்துக்கொள்ளுவினம். ஒதுங்கிக்கொள்ளப்போறம் எண்டு சொல்லுவினம். ஆனால் அவர்களால் அது முடியாது என சொன்னார்.

அவர் சொன்னது போல ஆபத்து மிக்க இந்த தொழிலில் 30வருடங்கள் பயணித்திருக்கிறேன் என்பதை எண்ணும் போது வியப்பாக இருக்கும்.

அச்சு ஊடகமான பத்திரிகையில் ஆரம்பித்து இலத்திரனியல் ஊடகமான தொலைக்காட்சி என தொடர்ந்து இன்று ஊடக குடும்பத்தில் பிந்திய வரவான இணையத்தளம் என்ற ஊடக பரப்பிற்குள்ளும் பிரவேசித்திருக்கிறோம்.

ஊடகத்துறையில் என்னுடைய ஆசான்கள் என நான் மதிக்கும் கோபு ஐயா, சிவகுருநாதன், ஊடககற்கை நெறியை மேற்கொண்டபோது எனக்கு ஆசான்களாக இருந்த  சிவநேசச்செல்வன், சற்சொருபவதி நாதன், ஆகியோரையும் மறக்க முடியாது. அனுபவ ரீதியாக ஊடகத்துறையில் கற்றதை விட பாடவிதானத்திற்கு உட்பட்ட வகையில் ஊடக வரைமுறைகளை கற்றுத்தந்தவர்கள் அவர்கள் தான். வெறுமனே செய்திகளை கட்டுரைகளை எழுதும் அனுபவத்தால் ஊடகத்துறையில் எம்மை வளர்த்துக்கொள்ள முடியாது என்பதை அவர்களிடம் ஊடக கற்கை நெறியை மேற்கொண்ட போது அறிந்து கொண்டேன்.

ஊடக பரப்பில் பயணித்த  கடந்த 30 வருடகாலத்தில் சந்தித்த அனுபவங்கள், துன்பங்கள்,  எழுதாத செய்திகள் என்பன பல. ஊடகவியலாளன் தான் கண்டதை அல்லது கேள்விப்பட்டதை செய்தியாக்கி விடுவான் என பலரும் நினைக்கிறார்கள்.

தனக்கு கிடைத்ததை எல்லாம் தனக்கென பதுக்கி வைத்துக்கொள்ள பழகிக்கொண்ட மனிதன் தான் கேள்விப்பட்ட செய்தியை ஓடி ஓடி பரப்பினான். தனக்கு கிடைத்த செய்திகளை எல்லாம் முந்திக்கொண்டு வெளியிட வேண்டும் என துடிப்பவன் தான் பத்திரிகையாளன்.

ஆனால் சில வேளைகளில் பல செய்திகளை வெளியில் சொல்ல முடியாத நிர்ப்பந்தத்தில் வாழ்ந்திருக்கிறோம். பல செய்திகள் பதிப்பில் வராதவையாக இருந்திருக்கின்றன. கால சூழலை கருத்தில் கொண்டு சில தகவல்களை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் கூட ஊடகவியலாளனுக்கு ஏற்படுகிறது.

அதிலும் முக்கியமாக தன் சொந்த இனத்தோடு வாழும் ஒரு ஊடகவியலாளன் தன்னுடைய சமூகத்தின் இனத்தின் நன்மை கருதி பல செய்திகளை மறைத்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறான். அது தான் வாழுகின்ற சமூகத்திற்காக தனக்கு தானே போடும் தணிக்கை.

என்னுடைய நண்பர் நிராஜ் டேவிட் அடிக்கடி என்னிடம் வலியுறுத்துகின்ற ஒரு விடயம்.

உங்களிடம் இருக்கின்ற பல தகவல்கள் பதிப்பில் வரவேண்டும். எங்களோடு பேசி காற்றில் கலங்கின்ற விடயங்கள் அல்ல இவை. அது ஒரு வரலாறு. ஊடகத்துறை பயணத்தில் சொல்லப்படாத செய்திகளை வெளிக்கொணர்கின்ற போது பல உண்மைகளை வெளிக்கொணர முடியும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

என்னுடைய ஊடகத்துறை வாழ்வின் இறுதிக்கட்டத்தில் முழுமையாக எழுதலாம் என எண்ணியிருந்த எனக்கு இத்தொடரை இப்போது எழுதிவிட வேண்டும் என்ற மன உந்துதல் ஏற்பட்டிருக்கிறது. எனது ஊடகத்துறை வாழ்வுக்கு விடைகொடுக்கும் காலம் வந்துவிட்டதோ…..?

நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி கொழும்பில் உள்ள சுவிசர்லாந்து தூதரகம் எனக்கும் தவராசாவுக்கும் விசா வழங்கிய அந்த காலப்பகுதியில் சிவராமின் வீட்டில் ஒரு மாலைவேளையில் தவராசாவும், நானும் அவனை சந்தித்தோம்.

சிவராம் சொன்னான்…. இங்கை இருந்தால் ஒரு துப்பாக்கி சூட்டோட இறந்து விடலாம். வேதனை தெரியாது. ஆனால் வெளிநாட்டிலை அணுவணுவாக கொல்லுவாங்கள்.. போங்கடா போங்கோ… என சொல்லிச்சிரித்தான். ஓல்ட் றிசேவ்ட் அடித்துக்கொண்டு அவன் சொன்னது உண்மையாகிவிட்டது. அவன் சிரிப்பு உண்மையாகிவிட்டது. அவன் சொன்னது போல துப்பாக்கி சூட்டில் அவன் இறந்து விட்டான். சில மணிநேர சித்திரவதைதான். ஆனால் வெளிநாட்டில் அணு அணுவாக நாங்கள் கொல்லப்படுகிறோம்…
அதுவும் எமது சமூகத்தால் கொல்லப்படுகிறோம் என்பதுதான் தாங்க முடியாத வேதனை…. வேதனை மிக்க 30வருடகால ஊடகப்பயணத்தில் நான் சந்தித்த பல சம்பவங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருக்கொண்டதே இந்த பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் என்ற தொடர்…..

இது குறிப்புக்களை வைத்து எழுதப்படும் தொடர் அல்ல… ஆண்டுவாரியான தொடரான சம்பவ கோவைகளும் அல்ல. அங்கொன்றும் இங்கொன்றுமாக என்மனதில் பதிந்திருக்கும் பதிப்பில் வராத விடயங்களை தரவிளைகிறேன்.
இதில் பல சுவார்சியமான விடயங்கள் இருக்கும், கசப்பான விடயங்கள் இருக்கும், அரசியல்வாதிகளாக, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களாக தங்களை காட்டிக்கொள்ளும் பலரின் முகமூடிகள் கூட இதில் கிழிக்கப்படலாம்… இதை எழுதுவதால் இவன் ஒரு துரோகி என்று கூட எனக்கு பட்டத்தை சிலர் சூட்ட முன்வரலாம்… இவைகளுக்கு அப்பால் நான் கண்ட கேட்ட பார்த்த பல சம்பவங்கள், பதிப்பில் வராத விடயங்களை தருவதே என் நோக்கம்

2004 மார்ச் 3ஆம் திகதி புதன்கிழமை… இந்த திகதியை பலரும் மறந்திருக்கலாம். ஆனால் அன்றைய தினம் நான் சந்தித்த நெருக்கடிகள்… வெளியில் வராத பல உண்மைகளை அடுத்த பகுதியில் சொல்ல இருக்கிறேன்

( தொடரும்)  thurair@hotmail.com

Readers Comments (12)

  1. Mohan says:

    I happy about your article !
    very good , please write all History for us . I think, this is valuable article. we are wait for your..Part!
    Please make one book !!!

  2. Dr.Ravimohan says:

    Very Good move Mr.Thurairetnam.
    I can smell your Journalistic touch in your writings. Please keep going.
    We the Tamil diaspora are expecting some exclusive stuff from you.
    Thanks for your great effort

  3. shiva says:

    SO WHAT? CARRY ON! THERE IS NO BARRIERS FOR BOLD DECISIONS.I ADMIRE U!

  4. p.murugaverl says:

    நன்று மிகநன்நு எழுதுங்கள் எதையம் மறைவின்றி எழுதுங்கள். உங்களைப் பற்றி ஒருவர் ஏதோ சொன்னபோது எனக்கு அதெல்லாம் தெரியாது அவரின் பத்தரிகைத்துறை அனுபவத்தை நம்மினம் வெளிநாட்டிலும் பெறவிருக்கும் வாய்ப்பை இழத்தல்நல்லதல்லஎன்றேன். மனநலக்கேடு ஏற்படுத்துவோரே இங்கு அதிகம். பொ.முருகவேள்

  5. மிகவும் கவலைக்குரிய விடயம் ..

    ////சிவராம் சொன்னான்…. இங்கை இருந்தால் ஒரு துப்பாக்கி சூட்டோட இறந்து விடலாம். வேதனை தெரியாது. ஆனால் வெளிநாட்டிலை அணுவணுவாக கொல்லுவாங்கள்.. போங்கடா போங்கோ… என சொல்லிச்சிரித்தான்.

    தொடர்ந்து எழுதுங்கள் .. உங்களது ஊடக வாழ்க்கை பற்றி அறிய ஆவலா உள்ளோம் .

    முடிந்தால் சிவராம் அவர்கள் பற்றிய பதிவும் எழுதுங்கள் .

  6. ஈழத்தமிழன் says:

    இக்கட்டுரையோடு தொடர்பில்லாத தங்களின் கருத்து நீக்கப்படுகிறது.
    ஆசிரியர்

    • Ravi says:

      உங்கட பெயர் ஈழத் தமிழர் என்பது போல யாராவது ஒரு கேணப்பயலின் பெயர் புலம்பெயர்ந்தவர்கள் என்று இருந்திருக்கும். அந்த நபரை அவர் முட்டாள் என்று கூறியிருக்கலாம்.
      இப்படிச் சில்லறைத்தனமான கேள்விகளை எழுப்பி ஒரு ஊடகவியலாளனின் பொண்ணா நேரத்தையும் வாசிக்கும் போன்றவர்களின் பொறுமையையும் குழப்பாமல் நல்ல கேள்வியா கேளுங்கோ பாரும்

  7. paskaran says:

    எதிர்பார்தோம் நல்லது எழுங்கள், குருபரன் மௌனம் கலைகிறது என்றதலைப்பில் எழுதுகிறார்,தில்லையும் யசியும் தங்கள்து அனுபங்களை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்

  8. Sriskandarajah says:

    திரு . துரைரத்தினம் அவர்களே ! நீங்கள் வடக்கு கிழக்கு பகுதி மட்டும் அல்ல இலங்கையின் எல்லாபகுதிகளிலும் ஊடக வியலளராக கடமை ஆற்றியதோடு எல்லா சமூகத்தோடும் உறவாடியவரும் கூட .உங்கள் எழுத்து மறைந்து கிடக்கும் , மக்களுக்கு தெரியாமல் புதைந்து கிடக்கும் பல விடயங்களை வெளி கொணரும் என நம்புகின்றோம் . துணிவோடு எழுதுங்கள். புலி புல்லை தின்ன தொடங்கி கன காலமாகிவிட்டது.வாழ்த்துக்கள்.

  9. Sriskandarajah says:

    உனது அறுபதுகளில் ……..டயரியை எடு.. இனியாவது உண்மையை எழுது — கவியரசு வைரமுத்து.

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...