Tuesday, September 19th, 2017

பாகிஸ்தானில் பதற்றம்; ஆட்சி கவிழ்ப்புக்கு தயாராகிறது இராணுவம்?

Published on January 11, 2012-3:26 pm   ·   No Comments

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலரை பிரதமர் கிலானி திடீரென நீக்கியுள்ளதை தொடர்ந்து அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது.  பாகிஸ்தானில் பிரதமர் கிலானி தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்ற சதி செய்வதாக அரசு தரப்பில் சந்தேகம் எழுந்தது. 

இதனையடுத்து அப்படி ஒரு சதி அரங்கேற்றப்பட்டால், அமெரிக்கா தனது படைகளை அனுப்பி பாகிஸ்தான் இராணுவத்தை ஒடுக்க வேண்டும் என்று அதிபர் ஆஸிப் அலி சர்தாரியின் ஒப்புதலுடன் அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு தரப்பில் கடிதம் எழுதப்பட்டதாக செய்தி வெளியானது. 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக பாதுகாப்பு செயலரான காலித் லோஹி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் இராணுவ தளபதி கயானி மற்றும் ஐஎஸ்ஐ தலைவர் ஷா ஆகியோர் இந்த பிரச்னை தொடர்பாக தெரிவித்த உண்மையான பேச்சுக்களை தாக்கல் செய்யவில்லை என்று பிரதமர் கிலானிக்கு தெரியவந்தது. 

இதனையடுத்து பாதுகாப்பு செயலர் பதவியிலிருந்து லோஹியை, கிலானி இன்று அதிரடியாக நீக்க உத்தரவிட்டார்.   இந்த வழக்கு விவகாரத்தில் இராணுவ தலைமை தளபதி கயானியும், ஐஎஸ்ஐ தலைவர் பாஷாவும் சட்டவிரோதமாக செயல்பட்டதாகவும் கிலானி பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

அவரது இந்த குற்றச்சாட்டும், பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சரவிட அதிக அதிகாரமுள்ளவராக விளங்கிய பாதுகாப்பு செயலரை நீக்கியதும், இராணுவ தரப்புக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில் கிலாயின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்துள்ள இராணுவ தலைமை தளபதி கயானி, பிரதமரின் இந்த குற்றச்சாட்டு மிக மோசமானது என்றும், கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறியுள்ளார். 

அரசுக்கும், இராணுவத்திற்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதல் காரணமாக இராணுவம், கிலானி அரசை கவிழ்த்துவிட்டு ஆட்சியை கைப்பற்றலாம் என்று கூறப்படுவதால், பாகிஸ்தானில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. 

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...