Monday, November 20th, 2017

பங்களாதேஷில் படகு விபத்து- 150க்கும் மேற்பட்டோர் பலி!

Published on March 13, 2012-10:09 am   ·   No Comments

பங்களாதேஷில் இன்று அதிகாலை வேளையில் 200பேருடன் சென்ற படகொன்று மூழ்கியுள்ளது. இதில் 35பேர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.  பங்களாதேஷின் தென்பகுதி யிலுள்ள மெக்னா ஆற்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இப்படகு சிறிய எண்ணெய்க் கப்பலுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.  மூழ்கிய படகை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பங்களாதேஷில் இவ்வாறான படகு விபத்துக்கள் சம்பவிப்பதும் இதன் காரணமாக பலர் பலியாகுவதும் வழமையான நிகழ்வாகவுள்ளது. அத்துடன், குறைந்தளவான பாதுகாப்பு அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்வது போன்றவையும் படகு விபத்து இடம்பெறுவதற்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 100 பயணிகளுடன் சென்ற படகொன்று விபத்திற்குள்ளானதில் 23 பொதுமக்கள் பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...