Monday, September 25th, 2017

கர்ப்பிணிகளே!பிறக்கப்போவது ஆண்குழந்தையா? பெண்குழந்தையா?

Published on April 10, 2012-9:21 pm   ·   No Comments

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையைப் பற்றி ஒரு கனவு இருக்கும். ஆணா, பெண்ணா என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கும். பெண் குழந்தை என்றால் ஒருமாதிரியான அறிகுறிகள் இருக்கும். அதேபோல் ஆண் குழந்தை கருவில் இருந்தால் வித்தியாசமான அறிகுறிகள் தென்படும் என்றும் வீட்டில் உள்ள வயதானவர்கள் கூறுவார்கள். ஆனால் கர்ப்ப காலத்தின் தொடக்கத்தில் ஒரு பெண் உட்கொள்ளும் உணவின் தன்மைதான் அவளது குழந்தை ஆணாக உருவாகுமா அல்லது பெண்ணாக உருவாகுமா என்பதையும், அந்த குழந்தையின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

கொழுப்புச்சத்துள்ள உணவுகள்

இது தொடர்பாக அண்மையில் கொலம்பியாவில் உள்ள மிஸ்சௌரி பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு பெண் கர்ப்ப காலத் தின் தொடக்கத்தில் காலை உணவை தவறாமல் உட்கொள்வதோடு, நல்ல கொழுப்பு சத்தான ஆகாரத்தையும் எடுத்துக்கொண்டால் ஆண் குழந்தை பிறக்க மிகப் பிரகாசமான வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுவே குறைந்த கொழுப்பு சத்துடைய உணவையும், உணவு இடை வேளையை நீண்ட நேரமாக வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு பெண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

வயிறு சிறிதாக இருக்கும்

ஆண் குழந்தை என்றால் கர்ப்பிணிகளின் வயிறு சிறிதாக இருக்கும். அதே சமயம் பெண் குழந்தை என்றால் வயிறு பெரிதாக காணப்படும். அதேபோல் கர்ப்பிணிகள் அதிகம் குண்டாகமாட்டார்கள்.

அம்மாவின் அழகு

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அம்மாவின் அழகு காட்டிக்கொடுத்துவிடும். ஆண் குழந்தை என்றால் அம்மாவின் அழகு மொத்தத்தையும் எடுத்துக்கொள்ளும் என்கின்றனர் வீட்டு பெரியவர்கள்.

அதேபோல் பெண்கள் வாழைப்பழம் அதிகம் உண்டாலோ, சோடியம், பொட்டாசியம் அதிகம் உள்ள இறால், அரிசி உணவுகள், உருளைக் கிழங்கு, பிரட் போன்ற உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு ஆண்குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்கின்றனர்.

கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து அதை கருவிலேயே அழிக்க நினைப்பது சட்டப்படி குற்றம். பிறக்கப்போகும் குழந்தை ஆணோ, பெண்ணோ எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஆரோக்கியமான குழந்தையாக பிறக்கவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...