Friday, September 22nd, 2017

ஆரோக்கிய சருமத்திற்கு ஏற்ற அழகான குறிப்புகள்!

Published on April 13, 2012-9:18 am   ·   No Comments

உடலின் ஆரோக்கியத்தை சருமம் காட்டிக்கொடுத்துவிடும். உடலின் ஜீரணத்தன்மை சரியாக இருந்தாலே ஆரோக்கியமான சருமம் கிடைக்கும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நன்றாக வெளியேற்றப்பட வேண்டும். அப்பொழுதுதான் சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

நார்ச்சத்து உணவுகள்

நாம் உண்ணும் உணவானது நார்ச்சத்துள்ளதாக இருக்கவேண்டும். இதுவே உடலின் ஜீரணத்தன்மையை அதிகரிக்கும். சருமத்திற்கும் ஆரோக்கியத்தை தரும். அப்பிள், மாம்பழம், அன்னாச்சிப்பழம் போன்ற பழங்களில் உயர்தர நார்ச்சத்து உள்ளது. அதேபோல் புருக்கோலி, போன்ற காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை உண்பதன் மூலம் உடலுக்கு தேவையான நார்ச்சத்து கிடைக்கும். உணவின் ஜீரணத்தன்மையும் அதிகரிக்கும்.

நல்ல கொழுப்புகள்

அதேபோல் மன அழுத்தமும், தூக்கம் குறைபாடும் சருமத்தை பாதிக்கும் அம்சங்களாம். எனவே தினசரி 8 மணிநேரம் நன்றாக உறங்குங்கள். மன அழுத்தம் இன்றி  இருங்கள். நல்ல கொழுப்புகள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. இது இதயத்தையும் பாதுகாக்கிறது. எனவே கடல் உணவுகளை அதிகம் உட்கொள்ளலாம். பளபளப்பான ஆரோக்கியமான சருமம் கிடைக்கும்.

பராமரிப்பு குறிப்புகள்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சருமம் உள்ளது. அதற்கேற்ப பராமரிக்க வேண்டும். கரடு முரடான திக்கான சருமம் கொண்டவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை அரை மேசைக்கரண்டி எடுத்து தேனுடன் ஒரு மேசைக்கரண்டி பால் பவுடர் போட்டு கலந்து பேஸ்ட் போல செய்யவும். இதனை முகத்தில் சீராகத் தேய்த்து 20 நிமிடத்திற்கு ஊறவைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர சருமம் மென்மையாகும்.

ஒரு சிலருக்கு முகத்தில் ஆழமான துளைகள் காணப்படும். இவர்கள் சோள மாவுடன் பால் கலந்து அடித்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து ‘பேஸ்ட்’ செய்து அதை முகத்தில் உடனே தடவிக் கொள்ளவும் சருமம் சீராகும்.

வெள்ளரி பேஸ்ட்

கறுப்பு மருக்களைக் கொண்ட சருமத்திற்கு, முட்டையின் வெள்ளைக் கருவை சோள மாவுடன் கலந்து பேஸ்ட் ஆக்கி இதைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது அரை மணி நேரம் வரை தடவவும். பிறகு தூய்மையான நீரில் தேய்த்துத் தேய்த்துக் கழுவவும்.

அனைத்து சருமத்திற்கும், வெள்ளரி பேஸ்ட் ஏற்றது. வெள்ளரி சாறு கண்களின் ஓரங்களில் உள்ள கரு வளையங்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து முகத்தில் தடவவும். இது சருமத்திற்கு பொலிவை ஊட்டுவதோடு குளிர்ச்சியையும் தருகிறது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...