Monday, September 25th, 2017

சிறிலங்கா பிரிமியர் லீக் 20-20 கிரிக்கட் தொடர் ஓகஸ்ட் 10ல் ஆரம்பம்

Published on May 10, 2012-5:05 pm   ·   No Comments

சிறிலங்கா பிரிமியர் லீக் 20-20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை நடாத்தப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
கடந்தாண்டு இடம்பெறவிருந்த இத்தொடர் இந்திய கிரிக்கெட் சபையின் போதிய ஆதரவின்மை மற்றும் தொடரை நடத்தவிருந்த தனியார் அமைப்புடன் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் எழுந்த சர்ச்சைகள் ஆகியன காரணமாக பிற்போடப்பட்டிருந்தது.
கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து அது தொடர்பாக ஆராய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சரால் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 5 வருட கால ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு புதிய திருத்தப்பட்ட ஒப்பந்தமொன்றே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மாகாணங்களை அடிப்படையாகக் கொண்ட மேல் மாகாண பஸ்னாகிர பியர்ஸ் அணி, மத்திய மாகாண கந்துரட்ட கைற்ஸ் அணி, கிழக்கு மாகாண நெகநஹிர நாகாஸ் அணி, தென் மாகாண றுகுண றைனோஸ் அணி, வட மாகாண உத்தர ஒரைக்ஸ் அணி, ஊவா மாகாண ஊவா யுனி க்கோர்ண்ஸ் அணி, மற்றும் வடமேல் மாகாண வயம்ப வோல்வ்ஸ் அணி ஆகிய 7 அணிகளும் விளையாடவுள்ளன.
கந்துரட்ட அணிக்கு குமார் சங்கக்காரவும் றுகுணு அணிக்கு சனத் ஜயசூரியவும் தலைமை தாங்குவர். வயம்ப அணிக்கு மஹேல ஜயவர்தனவும் ஊவா அணிக்கு சமிந்த வாசும் தலைமை தாங்குவர். வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்திய அணிகளுக்கு வெளிநாட்டு வீரர்கள் அணித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி வடக்கு அணிக்கு நியூஸிலாந்து அணித் தலைவர் டேனியல் வெட்டோரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்குப் பிராந்திய அணிக்கு பாகிஸ்தான் அணித் தலைவர் சஹீட் அப்ரிடி தலைமை தாங்கவுள்ளார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...