Sunday, November 19th, 2017

ஏமன் தற்கொலைத் தாக்குதலில் 70 படையினர் பலி!

Published on May 21, 2012-6:34 pm   ·   No Comments

ஏமனில் தலைநகர் சானாவில் ஒரு இராணுவ அணிவகுப்புக்கான ஒத்திகையின் போது நடந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 70 படையினர் கொல்லப்பட்டுள்ளார்கள்.அதிபரின் மாளிகைக்கு அண்மையில் உள்ள ஒரு சதுக்கத்தில் நடந்த இந்த குண்டுத் தாக்குதலில் மேலும் 100 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளார்கள்.

தற்கொலைத் தாக்குதலாளி இராணுவ சீருடையில் வந்ததாக செய்திகள் கூறுகின்றன.தாமே இந்தத் தாக்குதலை நடத்தியதாக அல்கைதாவை சார்ந்த செய்தி ஆதாரம் ஒன்று கூறியுள்ளது.அல்கைதாவுடன் தொடர்புடைய கிளர்ச்சிக்காரர்கள் மீது நாட்டின் தென்பகுதியில் ஏமானிய படையினர் தாக்குதலை நடத்தி வருகின்றார்கள். கடந்த பெப்ரவரியில் புதிய அதிபர் அப்ட் ரஃபு மன்சூர் ஹாதி அவர்கள் பதவியேற்ற பின்னர் நடந்த மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.

நாளை தலைநகரில் நடக்கவிருக்கும் ஒருமைப்பாட்டுத்தின அணிவகுப்புக்காக, காலையில் அணிவகுப்பு ஒத்திகையில் இருந்தவர்கள் மத்தியில் இராணுவ சீருடையில் வந்த தற்கொலையாளி தனது குண்டை வெடிக்கச் செய்துள்ளார். அல்கைதாவை அதனது ஏமன் நாட்டுத் தளங்களில் இருந்து அகற்றுவது என்பது ஒரு நீண்ட, இரத்தக்களரி மிக்க நடவடிக்கையாக இருக்கும் என்ற ஒரு அதிர்ச்சிச் செய்தியை இதன் மூலம் புதிய அதிபருக்கு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

கடந்த வருடத்தில் நாட்டின் தென்பகுதியில் உள்ள பல நகரங்களை அந்த அமைப்பு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டது. அவற்றை மீளக் கைப்பற்றுவதற்கு அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் ஏமன் நாட்டுப் படையினருக்கு உதவிக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அங்கு நிலைகொண்டுள்ள அல்கைதாவினரின் குண்டுத் தயாரிப்பு நிபுணத்துவம் குறித்து அமெரிக்கா பெரும் கவலையடைந்துள்ளது. ஏனெனில், அங்கிருந்து அமெரிக்கா செல்லும் பல விமானங்களில் குண்டுத் தாக்குதல்களை நடந்த அந்த அமைப்பு கடந்த காலங்களில் முயற்சித்திருக்கிறது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...