Tuesday, November 21st, 2017

அருணோதயா கிண்ணத்தை நாகர்கோவில் வெண்மதி கழகம் சுவீகரித்து கொண்டது

Published on May 29, 2012-2:39 pm   ·   No Comments

ஆழியவளை அருணோதயா விளையாட்டு கழகத்தினால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு இடையிலான மென்பந்துச்சுற்றப்போட்டி மற்றும் உதைபந்தாட்டசுற்றுப்போட்டிகள் கடந்த 25ஆம் திகதி முதல் நேற்று 28ஆம் திகதிவரை நடைபெற்றன.

நேற்று நடைபெற்ற 12ஆவது இறுதிப்போட்டியில் நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழகம் அருணோதயாவின் மென்பந்து துடுப்பாட்ட வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது. 12 வது இறுதிப்போட்டி நேற்று உடுத்துறை பாரதி அணியினருக்கும் நாகர்கோவில் வெண்மதி அணியினருக்கும் இடையில் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற உடுத்துறை பாரதி அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தனர். முதலில் உடுத்துறை பாரதி அணி அணி 9.5 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் அனைத்து விக்கெட்டினையும் இழந்து 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். இதில் உடுத்துறை பாரதி அணிசார்பாக ஜெயதீப் 12 பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களைப் பெற்றார். நாகர்கோவில் வெண்மதி அணி சார்பாக பந்துவீச்சில் கோகுலதாசன் 3 ஓவர்கள் பந்துவீசி 17 ஓட்டங்களை கொடுத்து 3 விக்கெட்டை கைப்பற்றினார்.

54 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நாகர்கோவில் வெண்மதி அணியினர் 6.3 பந்துப்பரிமாற்றங்களின் முடிவில் 3 விக்கெட்டை மாத்திரம் இழந்து 54 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றனர்.

அருணோதயா விளையாட்டு கழகத்தால் முதல் முறையாக நடாத்தப்பட்ட மாபெரும் விளையாடடுப்போட்டியின் மென்பந்து துடுப்பாட்ட வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்த முதலாவது அணி என்னும் பெருமையை நாகர்கோவில் வெண்மதி விளையாட்டுக்கழக அணி பெற்று சாதனை படைத்துள்ளது.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...