Wednesday, January 17th, 2018

கிழக்கு பல்கலைக்கழகம் நாறிப்போய் கிடக்கிறது- பல்கலைக்கழக சமூகம் துண்டுபிரசுரம் !

Published on June 3, 2012-8:30 am   ·   No Comments

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக நியமிக்கப்பட்ட கிட்டினன் கோவிந்தராசா மேற்கொண்டு வரும் ஊழல், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள், நிர்வாக சீர்கேடுகள் பற்றி கிழக்கு பல்கலைக்கழக சமூகம் நீண்ட துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த துண்டுபிரசுரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விநியோகிக்கப்பட்டதுடன் கல்வித்திணைக்களங்கள், பாடசாலைகள் , பிரதேச செயலகங்கள் என்பனவற்றுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த துண்டு பிரசுரத்தை கிழக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலகத்தில் உள்ள உயர்அதிகாரி ஒருவரே தினக்கதிருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அந்த துண்டுபிரசுரத்தில் உபவேந்தராக நியமிக்கப்பட்டிருக்கும் கிட்டினன் செய்து வரும் லீலைகள், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் என பெருந்தொகையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. கிழக்கு பல்கலைக்கழகம் நாற்றம் எடுக்கும் அளவிற்கு உபவேந்தர் கிட்டினனின் செயல்கள் இருப்பதை அந்த துண்டுபிரசுரம் விபரித்துள்ளது.

அந்த துண்டு பிரசுரம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது. கிட்டினன் கோபி பல்கலைக்கழக உபவேந்தராக வந்த வழியோ பிழையானது. குறுக்கு வழியில் கடத்தல் கொலை கொள்ளை கற்பழிப்பு கப்பம்பெறல் என சமூக அநீதிகளை செய்து வரும் கருணா, பிள்ளையான் போன்றவர்களின் காலைப்பிடித்தே அந்த பதவியை பெற்றுக்கொண்டார். எனவே கருணா, பிள்ளையான் போன்ற சமூகவிரோதிகள் எதை செய்கிறார்களோ அதைத்தான் கிட்டினனும் செய்ய தொடங்கியிருக்கிறார்.

வார்த்தைக்கு வார்த்தை நான் கெனடாவிலிருந்து ( கனடா என்று அவர் உச்சரிப்பதில்லை) வந்தவன், என கூறிக்கொள்ளும் கிட்டினன் கோவிந்தன் நான் மட்டக்களப்பு தண்ணி குடிப்பதா என கேட்கிறாராம்.
(கனடாவில் உள்ளவர்கள் கக்கூசுக்கு போனால் கழுவுவதில்லை என்று மட்டக்களப்பு மக்களுக்கு தெரியாதா என்ன)

அவரும் அவரின் மனைவியும் மட்டக்களப்பு தண்ணி குடிப்பதில்லையாம். போத்தலில் அடைத்து வரும் தண்ணி தான் குடிப்பார்களாம். ஒருநாள் போத்தலில் அடைத்த தண்ணீரை வாங்கி வர பிந்திய பல்கலைக்கழக கொள்வனவு உத்தியோகத்தரை உடனடியாக இடமாற்றம் செய்து விட்டார் கிட்டினன் ஐயா.
உபவேந்தர் கிட்டினனுக்கும் அவரின் மனைவியும் விடுதியில் அவர்களுக்கு தண்ணி செலவே மாதாந்தம் ஆயிரக்கணக்காக செலவழிக்கப்படுகிறதாம். போத்தல் தண்ணீரை குடிக்கிறார்களா அல்லது குளிக்கிறார்களா என்று தெரியவில்லை என தலையை பிய்த்து கொள்கிறார்கள் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள்.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பேஸ்ஸசிங் ஓபிசர் இப்ப ஒழுங்காக உபவேந்தரின் மனிஷிக்கு தண்ணி இறக்குகிறாராம். கிட்டினனின் மனைவிக்கு இப்ப தண்ணிப்பிரச்சினை இல்லை. 

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தங்குவதற்கு பெரிய பங்களா மிக உயர்வசதிகளுடன் அழகான வாவிக்கரை ஒரம் உள்ளது. அந்த பங்களாவில் கிட்டினன் தங்குவதில்லையாம். அந்த பங்களா ராசி இல்லாதது என்று அவரை சுற்றியிருந்தவர்கள் யாரோ சொல்லிவிட்டார்கள். உடனே தனியார் கட்டிடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அதற்கு 18இலட்சம் ரூபா திருத்த வேலை செய்வதற்கு செலவு செய்து அங்கு குடியேறியுள்ளார் சம்மாந்துறை கிட்டினன்.
சம்மாந்துறை கிட்டினன் படுத்துறங்கும் கட்டிலின் விலையை கேட்டால் தலையே சுற்றும். கட்டில் மாத்திரம் ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா, மெத்தை தனியாக அதுவும் இலட்சத்தை தாண்டிவிட்டதாம்.
நான் கெனடாவிலிருந்து வந்தநான் சும்மா கட்டில படுக்கலாமோ என்கிறாராம் சம்மாந்துறை கிட்டினன்.

இப்பொழுது கிழக்கு பல்கலைக்கழகம் சிங்களமயமாகி வருகிறது. காலி றுகுணு பிரதேசத்திலிருந்து வந்த 22வயது சிங்கள நங்கை நர்மதா கிட்டினன் ஐயாவுக்கு பக்கத்திலதானாம் வேலை செய்கிறார். ஊழியர்கள் எல்லோரும் வேலை முடிந்து சென்றாலும் கிட்டினன் ஐயா பங்களாவுக்கு போக இரவானாலும் அதுவரை அருகில் இருந்து பணிவிடை செய்துதானாம் சிங்கள நங்கை நர்மதா செல்கிறார்.
ஊழியர்கள் போனபின் இரவுவரை எதற்கு நிக்கிறாய் என சிங்கள நங்கை நர்மதாவை கேட்டுவிட்டார் நிர்வாக பிரிவில் வேலை செய்த செல்வநாதன். உடனடியாகவே தலையணை மந்திரம் போல கிட்டினனிடம் நர்மதா ஓதிவிட்டார்.
செல்வநாதனை அழைத்த கிட்டினன் திட்டி தீர்த்ததுடன் தண்ணியில்லாத காட்டிற்கு இடமாற்றுவது போல செல்வநாதனை திருகோணமலைக்கு மாற்றிவிட்டார். கிட்டினனும் காலி நங்கை நர்மதாவும் இப்போது பிரச்சினை இல்லாமல் இருக்கிறார்கள்.

பல்கலைக்கழக நிர்வாகத்தை சரியாக செய்ய தெரியாத கிட்டினன் புன்னைச்சோலையிலும் சம்மாந்துறையிலும் அழகுராணிகளை தெரிவு செய்து மகிந்து வருகிறாராம்

நேர பங்சுவாலிட்டிக்கு இந்த உலகில் இந்த கிட்டினனைதானாம் உதாரணமாக கொள்ள வேண்டும். அண்மையில் வடபகுதியை சேர்ந்த ஒருவரை விரிவுரையாளர் தேர்வுக்கு காலை 9மணிக்கு அழைத்திருந்தாராம் கிட்டினன். நேர்முகப்பரீட்சையை நடத்திய நேரம் இரவு 9மணி.

அடிப்படை நிர்வாக தகுதியோ, நேர்மையோ எதுவும் இன்றி ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோகங்களில் மிதந்து கொண்டிருக்கும் கிட்டினன் பல்கலைக்கழகத்தை விட்டு ஓடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என கிழக்கு பல்கலைக்கழக சமூகம் வெளியிட்டுள்ள துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்க்கு போர்த்தேங்காயை குடுத்தால் என்ன செய்யும். அதற்கு போர்த்தேங்காயை உடைக்கவா தெரியும். காலைக்கிழப்பி மூத்திரம் பெய்யத்தான் தெரியும். படிப்பறிவில்லாத பிள்ளையான், கருணாவின் காலைப்பிடித்து உபவேந்தர் பதவி பெற்ற கிட்டினன் என்ன செய்வான். பிள்ளையானும் கருணாவும் செய்யும் கடத்தல், கொலை கொள்ளை, ஆட்கடத்தல் வேலைகளைத்தான் செய்ய தெரியும்.

மட்டக்களப்பில் எத்தனையோ படித்தவர்கள், நேர்மையானவர்கள் இருக்கும் போது பிள்ளையான் கருணாவின் அடிவருடி கிட்டினன் கோவிந்தனை உபவேந்தராக்கி கிழக்கு பல்கலைக்கழகம் நாறிப்போய் கிடப்பதாக மட்டக்களப்பு மக்கள் தலையில் அடித்து கொள்கிறார்கள்.

இந்த துண்டு பிரசுரத்தை பெற விரும்புபவர்கள் aradmin@esn.ac.lk   +94 65 2240531  (Office)          Fax: +94 65  2240549  (Office)  தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...