Monday, September 25th, 2017

தாய்பால் குடித்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமும் மூளை வளர்ச்சியும் அதிகம்!

Published on June 5, 2012-3:16 pm   ·   No Comments

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தாய்ப்பால் குடித்த குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் அருமருந்து. தாய்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேசமயம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியும் அபாரமாக இருக்கும் என்று லண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. தாய்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் நேர்மறை எண்ணம் கொண்டவர்களாவும் இருக்கின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

5 மற்றும் 7 வயதுடைய குழந்தைகளையும், 11 மற்றும் 14 வயதுடைய குழந்தைகளையும் ஆய்வாளர்கள் ஆய்விற்கு எடுத்துக்கொண்டனர்.

இதில் தாய்ப்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள் வாசிக்கும் திறன், எழுதும் திறன் கொண்டவர்களாக இருந்தனர். கணக்கு, அறிவியல் பாடத்தில் அதிக திறன் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர்.

இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது என்பது அரிதாகிவருகிறது. 35 சதவிகித சிசுக்கள் ஒருவாரம் மட்டுமே தாய்ப்பால் குடிக்கின்றனராம். 21 சதவிகித குழந்தைகள் நான்கு வாரம் தாய்ப்பால் குடிக்கின்றனர். 7 சதவிகித குழந்தைகள் நான்கு மாதமும், 3 சதவிகிதம் குழந்தைகள் மட்டுமே 6 மாதம் வரை தாய்ப்பால் குடித்திருக்கின்றனராம். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அதேபோல் தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சியோடு ஒப்பிடுகையில், தாய்ப்பால் குடிக்காத குழந்தையின் மூளை வளர்ச்சி குறைவாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற பால் மூலம் குழந்தையின் உடல் வேண்டுமானால் நன்கு வளர்ச்சியடையலாம். ஆனால் மூளை வளர்ச்சிக்கு உரியது தாய்ப்பால்தான். எனவே அந்த அரிய தாய்ப்பாலை அன்னை தனது குழந்தைக்கு நிச்சயம் கொடுக்க வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...