Thursday, February 22nd, 2018

நீரழிவு நோயாளர்கள் கால்களை கவனமாக பராமரிக்க வேண்டும் !

Published on June 5, 2012-3:46 pm   ·   No Comments

நீரிழிவு நோயாளிகள் அதிகம் பாதிப்பப்படுவது கால் நரம்புகளினால்தான். எனவே பாத நரம்புகள் பாதிக்காத அளவிற்கு பாதுகாப்பான நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். அவர்கள் தினமும் கால்களை பாதங்களை நன்கு கவனிக்க வேண்டும். வெடிப்புகள் காயங்கள் கால் ஆணிகள் எந்த பாகமாவது கடினமாக கெட்டியாகி இருக்கிறதா என்றெல்லாம் பார்க்க வேண்டும். காலில் சிறுபுண் ஆணிகள் போன்றவை இருந்தால் சுய சிகிச்சை செய்யாமல் உடனே டாக்டரை அணுகவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கால்களுக்கென்றே சில உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றை அறிவுரைப்படி செய்து வரவும். உடற்பயிற்சிக்கு முன்பும் பின்பும் கால்களை நன்றாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். நடப்பது நல்ல பயிற்சி தினமும் ஒரு மணி நேரம்இ நடக்க வேண்டும். கால்களைத் தினமும் இளஞ் சூடான வெந்நீரில் மென்மை யான சோப் ஒன்றின் உதவியால் கழுவுங்கள். தூய்மையான துண்டு ஒன்றினால் பாதத்தை குறிப்பாக விரல் இடுக்குகளை ஈரமின்றித் துடையுங்கள். அழுத்தித் துடைக்காதீர்கள். இதனால் சருமத்தில் விரிவு ஏற்பட்டுத் தொல்லை உண்டாக்கலாம். கால் விரல்களைச் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிப் பிடித்து விடுங்கள். பாதக்கால்கள் மென்மையாக இருக்கும் படி இலேசாக எண்ணெய் பூசுங்கள்.

நீரிழிவு நோயாளிகள் உபயோகப்படுத்தும் பாதணிகளில் கவனமாக இருக்க வேண்டும். அவை மென்மையாகவும் அணிவதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். புதிதாக அவைகளை வாங்கி அணிகின்ற போது கவனமாக இருக்க வேண்டும். நகங்களை வெட்ட வேண்டியிருந்தால் ஒட்ட வெட்டாதீர்கள். சிறிதளவு விட்டு வெட்டுங்கள். தசைக்குள் இருக்கும் நகத்தையும் விரல் மூலைகளிலுள்ள நகத்தையும் வெட்டாதீர்கள். கால்களில் சிறிய மிகச்சிறிய காயம் சிராய்ப்பு ஏற்பட்டாலும் மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

நீரிழிவு நோயாளிகள் மதுப்பழக்கம் புகைப்பழக்கம் உள்ளவர்களாக இருந்தால் அந்த பழக்கத்தை விட்டு விடுவது நல்லது. உடனடியாக விட முடியாதவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று உடலில் ரத்த சீனி சத்து அதிகரிக்காத அளவிற்கு அருந்த வேண்டும். ஏனெனில் உடலின் ரத்த சீனி சத்து மீது நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது மது.

மது அருந்துபவர்கள் அதனுடன் கார்பனேட் அடங்கிய சோடா குளிர்பானம் கலந்துதான் குடிக்கின்றனர். இதுவும் அபாயகரமானது. எனவே நீரிழிவு நோயாளிகள் வெறும் வயிற்றில் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...