Tuesday, November 21st, 2017

சிவப்பு வைனை குடியுங்கள்- உடல்பருமனை குறைக்கலாம்- இருதய, நோய்க்கும் அருமருந்து!

Published on June 8, 2012-3:54 pm   ·   No Comments

சிவப்பு வைனில் அடங்கியுள்ள வேதிப்பொருளுக்கு உடல் பருமனை தடுக்கும் சக்தி உள்ளதாக அமெரிக்காவின் இன்டியானாவில் உள்ள பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புதிதாக கண்டுபிடித்துள்ளனர். சிவப்பு வைனில் உள்ள piceatannol என்ற அந்த வேதிப்பொருள் இளம் கொழுப்புச் செல்களின் வளர்ச்சியை தாமதப்படுத்துகிறது. அதாவது அது உடலைப் பருமனடையச்செய்யும் ரசாயன நடைமுறையை தாமதப்படுத்துகிறது.

இது குறித்து பயலாஜிக்கல் கெமிஸ்ட்ர்ய் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

சிவப்பு வைனில் உள்ள இந்த வேதிப்பொருளினால் இருதய மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நோய்களும் தடுக்கப்படுகிறது.மேலும் சிவப்பு வைனில் உள்ள இந்த வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.

புற்று நோயிலிருந்தும் காக்கிறது என்று இந்த ஆய்வில் கூறப்படுகிறது. இப்போது இந்த சிவப்பு வைனில் காணப்படும் இந்த வேதிப்பொருளை வேறு மாற்று வடிவங்களில் கொடுக்க முடியுமா என்ற ஆய்வு நடைபெற்று வருவதாக டாக்டர் கிம் என்பவர் கூறியுள்ளதாக அந்தப் பத்திரிக்கை செய்திகளில் கூறபட்டுள்ளது.

சிவப்பு வைனில் காணப்படும் இந்த வேதிப்பொருள் திராட்சை, மற்றும் புளூபெர்ரி போன்ற பழங்களிலும் உள்ளது.

எனவே சிவப்பு வைனை தினசரி நீங்கள் தாராளமாக குடிக்கலாம்- இரு கிளாஸ்களுக்கு மேற்படாமல். குடிமக்களே அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்ற வேதவாக்கையும் நீங்கள் மறக்க கூடாது

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...