Thursday, February 22nd, 2018

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியை நிறைவு செய்து விடை பெற்ற சூரியா!

Published on July 13, 2012-5:23 pm   ·   No Comments

விஜய் டி.வி.யின் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது.   பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்து 20 அத்தியாயங்களைப் பூர்த்தி செய்த நிலையில் நிறைவடைந்தது ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி.  இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகர் சூர்யா, ரசிகர்களின் கண்ணீருக்கு மத்தியில் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தங்களது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டி பரிசுத்தொகைகளைத் தட்டிச்சென்ற அதேவேளை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பங்குபற்றி சிற்சில தொண்டு நிறுவனங்களுக்கு வெற்றித்தொகையை பரிசாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் நடிகர்களான சூர்யா, கார்த்தி, சிவகுமார் ஆகியோர் நடத்தும் ‘அகரம’ பவுன்டேஷன், ஆதரவற்ற பெண்களுக்கு உதவும் நடிகை சுஹாசினியின் ‘நாம்’ பவுன்டேஷன் ஆகியவற்றுக்கு நிதி சேகரிப்பதற்காக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் பங்குபற்றி விளையாடினர். இந்தவார இறுதியில், சத்யராஜ், ராதா, குஷ்பூ, பிரதாபன், நதியா, ரகுமான், சுஹாசினி, மோகன் ஆகியோர் பங்கேற்று விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் இறுதி நாளான நேற்று, நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் சூர்யா, தனது மன உணர்வுகளை மிகவும் வருத்தத்தோடு வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களுடன் பழக கிடைத்த வாய்ப்பு தன்னை நடிகர் என்ற ஸ்தானத்தையும் மீறி இன்னொரு கட்டத்துக்கு அழைத்துச் சென்றதாக கூறினார்.

அத்துடன், நிகழ்ச்சியில் ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அதற்கு தான் மாத்திரமே பொறுப்பு என்று மிகவும் தன்னடக்கத்துடன் கூறியிருந்தார். சூர்யாவின் அந்த தன்னடக்கத்துக்கான பாராட்டு, நிகழ்ச்சியின் இறுதி நாள் விருந்தினராக வருகை தந்திருந்த சிவகுமாருக்கு நேரடியாகக் கிடைத்தது.

தந்தையின் நேரடி வாழ்த்துக்களுடனும், நிகழ்ச்சியின் 20 அத்தியாயங்களில் இடம்பெற்ற மறக்க முடியாத காட்சிகளை மீண்டும் ஒளிபரப்பு செய்தும் சூர்யா இந்த நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இறுதியில், விஜய் டி.வி.யில் பணியாற்றும் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விஜயிடமிருந்து விடைபெற்றார் சூர்யா. 

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...