Tuesday, November 21st, 2017

அமெரிக்காவின் குற்றச்சாட்டிற்கு சீன வீராங்கணை யே ஷிவான் மறுப்பு

Published on July 31, 2012-10:09 am   ·   No Comments

நீச்சலில் புதிய சாதனை படைத்த சீன வீராங்கனை ஊக்க மருந்தை பாவித்துள்ளார் என அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.   சீனாவைச் சேர்ந்த 16 வயதேயான யே ஷிவான் மகளிருக்கான 400 மீட்டர் தனி நபர் பிரிவில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். தனது போட்டியின்போது, கடைசி 50 மீட்டர் தூரத்தை அவர் 28.93 விநாடிகளில் நீந்திக் கடந்தார்.

ஆடவர் பிரிவில் 50 மீட்டர் போட்டியில் அமெரிக்க வீரர் ரியான் லோகேட் 29.1 விநாடிகள் தூரத்தில் போட்டி தூரத்தைக் கடந்தார். ஆனால் சீன வீராங்கனை 28.93 விநாடிகளில் அத்தூரத்தை கடந்தார். இதனால் அவர் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருப்பாரோ என்று அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் புகாரை யே ஷிவான் மறுத்துள்ளார். நான் எந்த ஊக்க மருந்தையும் பயன்படுத்தவில்லை. எனது திறமையை மட்டுமே பயன்படுத்தினேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நீச்சல் பயிற்சியாளர் ஜான் லியனார்ட் கூறுகையில், அமெரிக்க வீரரை விட மிகக் குறைந்த விநாடிகளில் யே கடந்தார் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது. சாதாரண முறையில் இதற்கான வாய்ப்பே இல்லை என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் தனது கடுமையான பயிற்சி மற்றும் முயற்சி காரணமாகவே தான் இதை சாதிக்க முடிந்ததாக சீன வீராங்கணை யே ஷிவான் தெரிவித்துள்ளார்.

சீன வீரர்களும் வீராங்கனைகளும் திறமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். கடுமையான பயிற்சியை எடுப்பவர்கள். தீவிரமாக முயற்சிப்பவர்கள். அவர்களுக்கு ஊக்கமருந்துகள் தேவையில்லை. எங்களது கரங்கள் சுத்தமானவை என சீன வீராங்கணை யே ஷிவான் தெரிவித்துள்ளார்.

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...