Monday, September 25th, 2017

இலஞ்சம் வாங்கிய சிறிலங்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் கிரிக்கட் நடுவர்கள் சிக்கினர்

Published on October 9, 2012-6:21 am   ·   No Comments

லஞ்சம் பெற்றுக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. தொலைக்காட்சி திங்கள்கிழமை ஒளிபரப்பியது. இந்த விடியோவில், வங்கேதசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டைச் சேர்ந்த 6 நடுவர்கள் பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது பதிவாகியுள்ளது.

இவர்கள், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும், இலங்கை பிரீமியர் லீக் ஆட்டங்களிலும் முடிவுகளை மாற்றி அறிவிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி உலகம் முழுவதுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த முறைகேட்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கெளரி மற்றும் அனீஸ் சித்திக், வங்கதேசத்தைச் சேர்ந்த நாதிர் ஷா, இலங்கையைச் சேர்ந்த காமினி திஸாநாயக்க, மெளரீஸ் வின்ஸ்டன் மற்றும் சகாரா கல்லேக் ஆகிய 6 நடுவர்கள் ஈடுபட்டுள்ளதாக விடியோ பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில், ஷா மற்றும் ஷரஃபுதுல்லா ஆகிய நடுவர்கள் மட்டும் இந்த முறைகேட்டுக்கு சம்மதிக்கவில்லை. இந்த விடியோவும் டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இவர்களிருவரும் இப்போதையே ஐசிசி நடுவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், “வங்கதேச பிரீமியர் லீக் ஆட்டங்களில் “மேட்ச் பிக்சிங்´குக்கு பாகிஸ்தான் வீரர் நஸீர் ஜம்ஷெட் ஒப்புக் கொண்டதாக´வும் ஷா அதில் தெரிவித்துள்ளார். 

இலங்கை நடுவர் கல்லேக் செப்டம்பர் 17ஆம் திகதி நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மை, நாணய சுழற்சி, அணி வீரர்கள் விவரம் உள்ளிட்ட தகவல்களை ரூ. 50 ஆயிரத்துக்கு வெளியிடுவதாக ஒப்புக் கொண்டது விடியோவில் பதிவாகியுள்ளது.

“இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மதுபானம் வாங்கித் தந்தால் முடிவுகளை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவர்´ என்று திஸாநாயக்க உறுதியளித்ததும் டி.வி.யில் ஒளிபரப்பானது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நடுவர் சித்திக், “பணம் அளித்தால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்குச் சாதகமாக செயல்படுவதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தான் சமாளித்துக் கொள்வதாகவும்´ கூறியது விடியோவில் வெளியாகியுள்ளது.

http://youtu.be/PGgSV2Szzpo
http://youtu.be/IfqkZSYcdPo
http://youtu.be/Hyg3iKRdZFc
http://youtu.be/TfzKQi2zlvI

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...